Header Ads



UNP செயற்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டது, ரணில் இழுத்தடிப்பதாக அதிருப்தி

இன்று 6 நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான அரசியல் கூட்டணி மற்றும் அதன் நிர்வாக பதவிகள் குறித்து இறுதி முடிவை எடுக்க இன்று உத்தேசிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த செயற்குழுவில் கலந்துகொள்ளாத சஜித் ஆதரவாளர்கள் இன்று நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சில பிரச்சினைகளை பேசவிருந்தனர்.ஆனால் கட்சித் தலைவர் ரணிலால் இறுதி நேரத்தில் இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் மார்ச் முதல் வாரத்தில் கலைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தயாராக உடனடி நடவடிக்கைகளை எடுக்காமல் இவ்வாறு கட்சித் தலைமை இழுத்தடிப்பு செய்வது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ள அதேமசயம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் இவ்வாறே இறுதி நேர முடிவுகளுக்கு ரணில் திட்டமிட்டதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் செயற்குழு ஒத்திவைக்கப்படுமாயின் தன்னிச்சையாக சில தீர்மானங்களை சஜித் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எடுக்குமென அறியமுடிந்தது. sivaraja

1 comment:

  1. Mr Sajid,,, RNL will continue till he make you face another lose again and finally he will leave you free only after making 2/3 of pohottu.

    It is really waste to time... People carefully looks at what is going on at higher level of UNP, They are made to hate this party by this kind of dragging by RNL.. Definitely the public will not vote for party like this (highly unstable in taking decision). How come this party can run the country under this unsuitability ?

    ReplyDelete

Powered by Blogger.