February 20, 2020

மக்கா மாநகரில் அமைந்துள்ள 'சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள்


இக்பால் அலி

புனித மக்கா மாநகரில் அமைந்துள்ள ' சிலோன்ஹவுஸ்' பற்றிய தகவல்கள் சில பத்திரிக்கைகளிலும் சமூகவலைத்தலங்களிலும உண்மைக்குப் புறம்பான பல செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளிக்;கொணரப்பட்டன. குறிப்பாக 'சிலோன்ஹவுஸ்'பற்றியும் அதன் ;பராமரிப்பாளர் 'ஸாதிக்ஹாஜியார்' அவர்கள் ;பற்றியும் சில பத்திரிக்கைகளிலும் சமூகவலைத்தலங்களிலும் உண்மைக்குப் புறம்பான பல செய்திகள் பரப்புரை செய்யப்பட்டன. இது உண்மையிலேயே மிகக் கவலையையும் அதிர்ச்சியையும் தரும் தகவல்கள் என ஜித்தாவிலுள்ள  புத்திஜீவக் குழுவினர்கள் ஒன்று சேர்ந்து  இது தொடர்பான கருத்துக்களை  வெளியிட்டுள்ளார்கள். 
அவைகளில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருந்தன. எனினும் சிலோன் ஹவுஸ் பற்றிய தெளிவான தகவல்களை ஒரு குழுவாகச் சேர்ந்து கலந்துரையாடி அதற்கான பதிலை  ஜித்தாவிலுள்ள புத்திஜீவிக் குழுவினர்கள் முன் வைத்துள்ளார்கள்.
அதேவேளை மிகவும் சிரமப்பட்டு  ,எந்தவித சுய இலாபமோ,  நோக்கமோ  இன்றி சிலோன் ஹவுஸை மீட்டெடுத்து,  இத்தனை வருடங்களாக பராமரித்து  வரும் சாதிக் ஹாஜியார் அவர்களிடம், இதன்  எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாக அவர்கள் வினவியபோது:  'வக்ஃப்  வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சிலோன் ஹவுஸை  இவ்வளவு காலமும் மிகச்சிசீராகவும்,  நம்பிக்கையுடனும் பராமரித்து பாதுகாத்து வந்துள்ளேன்.  இனி வரும் காலங்களில் அதனை எந்தவித தனிநபர் இலாபத்தையும் எதிர்பாராது, இந்த நிலையான சொத்தை நன்கொடையாக வழங்கியவர்களின் இரண்டு பிரதான நோக்கத்தையும் நிறைவேற்றக்கூடிய, பராமரிப்பதற்கு தகுதியானவர்கள்,  இலங்கை அரசாங்கத்தின் கலாச்சார திணைக்களத்தினூடாக, அதிகாரப்பூர்வமாக முன்வருவார்களாயின், அவரிடம் சவூதி அரேபியாவின் வக்ஃப்  வாரியத்தின் அனுமதியுடன்  அதனை ஒப்படைப்பதற்கும் தான் தயாராக இருக்கிறேன்'   என அவர் தெரிவித்துள்ளதாக  இக்குழுவினர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். 
1964;ஆண்டு இலங்கையிலிருந்து புனித மக்காவிற்கு ஹஜ்யாத்திரைக்கு சென்ற இலங்கையைச் சேர்ந்த யாகூப்லெப்பை ஷாஹுல்ஹமீத் அவர்களின் தலைமையில் டி. பி. ஜாயா, முஹம்மது காசிம் முஹம்மது கலீல், அஹமது உஸைன் மார்க்கான் மரைக்கார், ,அலித் தம்பி ஹமீதுலெப்பை, அஹமத் சுலைமான் உஸைன் பாவா மரைக்கார் பாவா,  முஹம்மத் சுலைமான்  உஸைன் மரைக்கார் பாவா, முஹம்மத் ஹனிபா முஹ்மூத் நெயினா மரைக்கார்,  முஹம்மத் பழீல் அப்துல் கபூர்,  சேர் ராசிக் பரீத் முலியவர்கள் சென்றனர்.  இந்தக் குழுவினர்கள்  மிஸ்பலா என்னுமிடத்தில் 60 சதுர மீற்றர் சுமார் இரண்டு பேச்சஸ் அளவிலான  ஒரு கட்டிடத்தை விலைக்குவாங்கி பின்வரும் இரண்டுநோக்கங்களுக்காக (வக்ஃபு) அன்பளிப்புச் செ;;ய்தார்கள். இதன் காணியின் உறுதிப்பத்திர எண்இ 404 ஆகும். இது இஸ்லாமிய வருடப்படி ஹஜ்ரி ஆண்டு ஆறாம் இரண்டாம் மாதம் 06.02.1384ஹி நடந்த சம்பவமாகும். 
1. இலங்கையிலிருந்து வரும் ஏழை ஹாஜிகள்  அதில் தங்கவைக்கப்பட வேண்டும். 
2. முஹர்ரம் மாதத்திலிருந்து ரமழான மாதம் வரை குர்ஆன மத்ரஸா நடத்தப்பட வேண்டும் என்பது அவர்களுடைய தூய்மையான நோக்கமாகும்.
சஊதி அரேபிய நாட்டின் சட்டப்படி சஊதியிலுள்ள எந்த நிலையான
சொத்தையும் பிறநாட்டவர்கள் உரிமை கொண்டாட நிர்வகிக்க முடியாது என்பதால்  'சிலோன ;ஹவு;ஸ் ;கட்டிடத்தை' மேற்பார்வை செய்வதற்காக உமர்வலி என்ற சஊதி பிரஜையிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கட்டிடம் இரண்டு மாடிகளையும் தரைத்தளத்தையும் கொண்டது. ஒவ்வொரு மாடியிலும் தலா ஒரு அறையைக் கொண்ட இக்கட்டிடத்தில் 32ஹாஜிகள்  மாத்திரமே தங்கமுடியும்.
இக்கட்டிடத்தை மீட்டெடுப்பதற்காக நமது தலைவர்கள் செய்த முயற்சிகளில் ஈடுபட்டனர் . அந்த வகையில்  உமர்வலி என்பவர் (வக்ஃபு) அன்பளிப்புச் செய்தவர்களின ;நோக்கத்தை நிறைவேற்றாமல் தன் சொந்த தேவைகளுக்காக 1964ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரையிலும் சுமார்  43 வருடகாலம் அக்கட்டிடத்தை பாவித்துக்கொண்டிருந்தார்கள்.
பிற்காலங்களில் இலங்கை ஹாஜிகளின் மருத்துவ சேவைகளுக்காக வேண்டி இலங்கை ஹஜ்  குழுவிற்கு வாடகைக்கு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் 2004ம் ;ஆண்டிற்க்குப்பின அதனையும் நிறுத்திக்கொண்டார்கள்.     
இவற்றை அறிந்து கொண்ட இலங்கையை சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்.  றியாத்திலுள்ள இலங்கை தூதுவராலய தூதுவர்கள். ஜித்தாவிலுள்ள துணைத் தூதுவர்கள் மற்றும் இலங்கையிலுள்ள முஸ்லிம் கலாச்சார அமைச்சின் பொறுப்பாளர்கள என்று பலர ;உமர்வலியிடமிருந்து அக்கட்டிடத்தை மீட்டெடுப் ;பதற்காகப் பல ஆண்டுகள் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்;ட போhதிலும் ;எதுவிதப் பயனுமளிக்க வில்லை. பின்னர் மக்காவிலுள்ள இலங்கையைப் பிறப்;பிடமாகக் கொண்ட சஊதி பிரஜாஉரிமைபெற்ற முஹம்மது றியாழ் ;ஸாதிஹான்(ஸாதிக்ஹாஜியார்) என்பவரிடம் ;இதைமீட்டெடுக்கும் படி எல்லோரும் வேண்டிக் கொண்டார்கள்.

இக்கட்டிடத்தை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு சஊதி அரசிடம் கேட்டபோது சஊதி அரசாங்கம் அதை வழங்கமறுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இக்கட்டிடத்தை இலங்கை 'ஹஜ்குழுவின்' பாவனைக்காக இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு சஊதி அரசாங்கத்திடம ;வேண்டிக்கொண்டார்கள். 
அதற்கு அப்போது  இருந்த சஊதி அரேபியமன்னர ;'அப்துல்லாஹ ;இப்னு அப்துல் அஸீஸ்'   பின்வருமாறுபதிலளித்தார்.  இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 17.04.1421 ஆண்டில் அமுல் படுத்தப்பட்ட சட்ட இலக்கம் (அஃ15) படி சஊதி அரேபியாவின ;எந்தவளத்தையும ;சஊதி அல்லாத ஒருவர் உரிமை கொண்டாட முடியாது என்ற சட்டம் இருப்பதால்' இக்கட்டிடத்தை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்க முடியாது என்று உறுதிப்படுத்துகின்றோம்'   மேலும் இக்கட்டிடத்தை மேலே கூறப்பட்ட இரண்டு நிபந்தனைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தும்படி சஊதி வக்ஃப் வாரியத்திற்கு அனுமதி அளித்திருக்கின்றோம் ;எனவும் (07.07.2007)ம் திகதி யிடப்பட்ட கடிதத்தில் சஊதி அரேபியாவின ;வெளிவிவகார அமைச்சின்ஊடா  கௌரவ இலங்கை ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது. 

ஸாதிக்ஹாஜியாரும் கட்டிடம் மீட்பும்

ஸாதிக்ஹாஜியார் அவர்கள ;2008ம் ஆண்டு இலங்கை சென்ற போது   முன்னாள் கௌரவ அமைச்சர்களான   ஏ. எச். எம் பௌசி  மற்றும் அலவி மௌலானா அ;ப்போது கடமையாற்றி முஸ்லிம கலாச்சார அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் மீராமுஹ்யுத்தீன ஆகியோர் ஸாதிக்ஹாஜியாரிடம் சட்டரீதியான அதிகாரத்தை (வகாலத்பொறுப்பை) சட்டத்தரணி ஊடாக ஒப்படைத்தார்கள். ஆவணங்கள் இதற்குசான்று பகரக் கூடியதாக  இருக்கின்றன.   
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியும் அன்பளிப்புச் செய்தவாகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும் இ இம்மாபெரும்பணியை ஸாதிக்ஹாஜியார் அவர்கள் பொறுப்பேற்கமுன்வந்தார்கள். 

நீதிமன்றத்தில் வழக்குத்தொடரல்

21.10.1430ஹி (10.10.2009)ம் ஆண்டு  மேற்படிகட்டிடத்தை மீட்டெடுப்பதற்காக ஸாதிக்ஹாஜியார் அவர்கள் மக்காவிலுள்ள நீதிமன்றத்தில் உமர்வலிக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக வழக்கை தொடர்ந்தார்கள். 16.06.1431ஹி (30.05.2010)ம்திகதி அல்லாஹ்வின்பேரருளால்தீர்ப்புசிலோன்ஹவுஸுக்குசாதகமாகஅமைந்தது.  
இந்தவழக்கைதொடர்வதற்காக 250000 (இரண்டரைஇலட்சம்) சஊதிறியால ;செலவானது. இந்தப்பணம் ஸாதிக்ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து செலவிடப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஸாதிக்ஹாஜியார் அவர்களும்'சிலோன்ஹவுஸ்' பராமரிப்புபொறுப்பும்
உமர்வலி அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டபின ;அக்கட்டிடத்தை பராமரிப்பதற்கு யாரும இல்லாதகாரணத்தினால்  வக்ஃப்வாரியம்நீதிமன்றத்தில் ;இக்கட்டிடத்தைபராமரிக்கும் பொறுப்பை தம்மிடம் தரும்படி 15.09.1431ஹி (25.08.2010)ம் திகதி கோரப்பட்டது.  அதற்கு இண்ங்க நீதிபதி அவர்கள் 'சிலோன்ஹவுசை' நிர்வகிக்கும் ;பொறுப்பை வக்ஃப்வாரியத்திற்குகொடுத்து மேற்படி ஸாதிக் ஹாஜியார் அவர்கள ;மக்கா ஹரம்ஷரீபில் நடத்தப்பட்டு வரும ;'மஃஹதுல்ஹரம்' என்னும ;கலாசாலையின ;துணைஅதிபராக 30வருடகாலம் ;சேவையாற்றிய அனுபவசாலி என்ற காரணத்தினாலும். அதேபோன்று மக்காவிலுள்ள' அமீர்தாமிர்'  அவர்களின ;தாயார் பெயரில் ;உள்ள நிறுவனத்தின் ;கீழ் இயங்கிவரும் 350குர்ஆன் ;மத்ரஸாக்களின் பொறுப்புதாரி என்ற காரணத்தினாலும ;மற்றும் ஹரம் ஷரீபின் ;பராமரிப்பின ;கீழுள்ள இரண்டுவக்ஃப் கட்டிடங்களுக்கும் ;ஸாதிக்ஹாஜியார் ;அவர்களே பொறுப்பாக இருக்கின்றார் கள் என்பதாலும் அதேபோல் ஹரம் ஷரீபில் ஹாஜிகளுக்கு ஃபத்வா வழங்கும் குழுவின்அங்கத்தவர் போன்ற பல பொறுப்புகளுக்களில் ஈடுபடும் அனுபவசாலி என்பதால் இதை பராமரிப்பதற்கு தகுதியானவர் ;ஸாதிக்ஹாஜியார ;அவர்கள் தான் என்பதை அறிந்து கொண்ட நீதிமன்றம் ; நான்கு சாட்சியாளர்களுக்கு முன்னிலையில் 22.12.2010 ஆண்டு  இப்பொறுப்பை ஸாதிக்ஹாஜியார் அவர்களுக்கு வழங்கியது. மேலும ;அவர்களை மேற்பார்வை செய்வதற்கும் அதனுடைய வரவு செலவுகளை கண்காணிப்பதற்கும ;நீதிமன்றம் வக்ஃப் வாரியத்தை பொறுப்புச்சாட்டியது. இதற்கு ஆவணங்கள் சான்றுறாகும். 

ஸிலோன்ஹவுஸும் ஹரம்விஸ்தரிப்பும்

கட்டிடத்தை ஸாதிக்ஹாஜியார் அவர்கள் 16.01.1432 ஹி (22.12.2010)ம் ஆண்டு பொறுப்பெடுத்தார். அப்போது அது பாவிப்பதற்கு பொருத்தமற்ற கட்டிடமாகவே இருந்தது. அப்போது எடுத்த புகைப்படங்கள் அதற்கு சான்றாகும்.  அக்கட்டிடத்தை புனர்நிர்மாணம் ;செய்வதற்கு மூன்று இலட்சம் சஊதி றியால்கள் செலவு செய்யப்பட்டன.  இது ஸாதிக்ஹாஜியார் அவர்களின் சொந்தப்பணத்திலிருந்து இத்தொகை செலவளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புனர்நிர்மாணவேலைகள் முடிவுறும்வேளையில் ஹரம்ஷரீப் விஸ்தீரணத்திற்காக இக்கட்டிடம் 20.04.1433 ஹி (13.03.2012)ம் ஆண்டு சஊதி அரசாங்கத்தால் இடிக்கப்பட்டது.

அரசாங்க மதிப்பீட்டின்படி நஷ்டஈட்டுத்தொகையாக 26140320.10  இருபத்தி ஆறுமில்லியன் ஒரு இலட்சத்தி நாற்பது ஆயிரத்தி முன்னூற்றி இருபது சஊதி றிய hல் ;பத்து ஹலலா   6970752 ருளுகூ ஆறுமில்லியன் ஒன்பது இலட்சத்தி எழுபது ஆயிரத்தி எழுநூற்றி ஐம்பத்தி இரண்டு அமெரிக்க டொலர்  சில பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது போன்று நூறுமில்லியன் அமெரிக்க டொலர் என்பது தவறானது  சஊதி அரசாங்கம ;இத்தொகையைபைத்துல்மாலிடம் (திறைசேரி) ஒப்படைத்தது. ஸாதிக்ஹாஜியாரிடம்அல்ல ஆவணங்கள் இதற்கு சான்றாக உள்ளன.  
இப்பணம் பைத்துல்மாலில் தேங்கி இருப்பதை உணர்ந்து கொண்ட ஸாதிக்ஹாஜியார ;அவர்கள ;  அதன் மூலம் புதிய கட்டிடம ;வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்திடம் முன்வைத்தார்கள். அதை ஏற்றுக ;கொண் நீதீ மன்றம் அத்தொகைக்கு ஈடான கட்டிடத்தை கொள்வனவு செய்து கொடுக்கும் படி பைதுல்மாலை வேண்டிக்கொண்டது. 

அப்பணத்திலிருந்து பைத்துல்மால் மூலம் மக்காவில் வாங்கப்பட்ட சொத்துக்கள்

1. 20.09.1434ஹி (28.07.2013)ம்ஆண்டு அஸீஸிய்யாவில ;நான்கு மாடிகளைக கொண்ட  மாடிகட்டிடம் 18374344 பதினெட்டுமில்லியன் மூன்று இலட்சத்தி எழுபத்தி நான்காயிரத்தி மூன்னூற்றி நாற்பத்தி நான்கு  சஊதி றியாலுக்கு கொள்வனவுசெய்யப்பட்டது. இதில் 237 ஹாஜிகள் தங்கமுடியும். 
2. 04.08.1437ஹி   (11.05.2016) ம் ஆண்டு பத்ஹா குறைஷ் என்னுமிடத்தில் 16வீடுகளைக ;கொண்ட ஒரு கட்டிடம்  700000 (ஏழுமில்லியன்)  சஊதிறியாலுக்கு கொள்வனவு செய்யப்பட்டது. இவை வருட வருடம்  வாடகைக்கு விடப்படும். 
இவை அனைத்தும் நீதிமன்றம் மற்றும் வக்ஃபு வாரியத்தின் மேற்பார்வையில  ;நிகழ்ந்தவைகள். ஆவணங்கள் ;இதற்கு சான்று. இதில விசேடமாக ஸாதிக்ஹாஜியார் அவர்கள ;தனித்து செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறப்பட்ட கட்டிடங்களிலிருந்து வரக்கூடிய வருமானத்தின் மூலம்  வக்ஃப் செய்தவர்களின ;நோக்கங்கள ;இரண்டும் நிறைவேற்றப்படுவதோடு  இதற்குரிய வரவுசெலவுகள் அனைத்தும் சஊதி அரேபியாவின் வக்ஃபுவாரியத்தின் மேற்பார்வையின ;கீழ் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்தகாலங்களில் இது பற்றிய விபரங்கள ;அனைத்தும்  இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்ட சில அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம்  கலசார திணைக் களஅதிகாரிகளிடம் ஆவணங்களுடன்; கையளிக்கப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக ஸாதிக்ஹாஜியார் அவர்கள க் கட்டிடத்தை மீட்டெடுப்பதற்காக அரும்பாடுபட்டு  இம் இம்மாபெரிய சொத் தை நம் சமூகத்திற்காக இன்றுவரை பாதுகாத்துவைத்து  நம் சமூகத்திற்காக செய்தசேவைகளுக்கு நன்றிசெலுத்த வேண்டிய நாவும் பேனாவும்   குறை கூறுவது பொருத்தமற்ற செயற்பாடாகும் என்று அவர்கள்  தெரிவிகின்றனர். 
மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவராகமாட்டார் என்பது நபிமொழியாகும். நன்றி செலுத்த வேண்டிய நாவும் பேனாவும்  சம்பந்தமில்லாத தனக்கு தெரியாத செய்திகளைப் பதிவிடுவது பரப்புவது மற்றவரின ;மானத்தில் ;கைவைக்கும் மாபெரும ;குற்றமாகும்.
இப்படிப்பட்டவர்கள் நாளை மறுமையில் தன்னுடைய நற்கருமங்களை இழப்பதோடு மற்றவரின் பாவங்களை சுமக்கின்ற ஒரு துர்பாக்கிய நிலை ஏற்படும ;என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நாங்கள் அறிவித்துக்கொள்கின்றோம் என்று மேலும் அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.  

3 கருத்துரைகள்:

Most of our people are born to criticise others ...it is pshycological dumbness.pls ignore the criticism and move forward.sadik Haji doesn't need this building to make money for living.it is a privilege having our man with that highly influential society.he helps a lot and he won't take this illegaloney for his living.

யார் அந்த புத்திஜீவி குழுவினர்? இக்பால் அலியா?

மறைமுகமாக நடைபெற்ற நற்பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக! தீர விசாரிக்காமல் தடி எடுத்த வேட்டைக்காரர்கள் நிறைந்த சமூகமாகவே வாழ்கின்றோம். இந்நிலை பெரும் துரதிஷ்டம்.

Post a comment