Header Ads



மது­பான நிலைய உரி­மை­யா­ளர்­க­ளுக்கு தேர்­தலில் போட்­டி­யி­ட அனு­ம­திக்கக்கூடாது

(செ.தேன்­மொழி)

மது­பான நிலைய உரி­மை­யா­ளர்­க­ளுக்கு இம்­முறை பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான அனு­ம­தியை எந்தக்கட்­சியும் பெற்றுக்கொடுக்கக்கூடாது என்று இலங்கை மது ஒழிப்பு மகா சபையின் தலை­வ­ரான பேரா­சி­ரியர் இத்­தே­பானே தம்­மா­லங்­கார தேரர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

கொழும்பு - விஜே­ராம மாவத்­தை­யி­லுள்ள சர்­வ­தேச விபஸ்­ஸனா தியான மண்­ட­பத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்போதே அவர் இதனை தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

புகைத்தல், மது அருந்­துதல் மற்றும் போதைப் பொருள் பாவ­னையின் கார­ண­மாக வரு­டத்­திற்கு 40 ஆயிரம் பேர்­வரை உயி­ரி­ழக்­கின்­றனர். இதனால் நாட்­டிற்கு பெரும் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது. இந்த உயி­ரி­ழப்­பு­க்களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கிலும், போதைப்­பொருள் பாவ­னை­யற்ற நாடாக இலங்­கையை மாற்­று­வ­தற்­கா­கவும் மது ­ஒ­ழிப்பு மகா சபை பல்­வேறு செயற்றிட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதற்­க­மைய நூற்­றுக்கும் அதி­க­மான மது­பான நிலை­யங்கள் மூடப்­பட்­டுள்­ள­துடன், மது­போ­தைக்கு எதி­ராக பல்­வேறு செயற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லையில் மது போதைக்கு அடி­மை­யா­ன­வர்­களை மீட்­ப­தற்­காக அவர்­க­ளுக்கு புனர்வாழ்­வ­ளிப்­ப­தற்­கான திட்­டமும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. 400 குடும்­பங்கள் இருக்கும் ஒரு கிரா­மத்­திலே வரு­டத்­திற்கு மது­பானம் மற்றும் புகைத்­த­லுக்­காக இரண்­டரைக்கோடி ரூபாய் பணத்தை செல­வி­டு­கின்­றனர். இதனால் நாட்­டுக்கு பெரும் இழப்­புகள் ஏற்­ப­டு­கின்­றன. வரு­டத்­திற்கு புகைத்தல் கார­ண­மாக 20 ஆயிரம் பேர் உயி­ரி­ழப்­ப­துடன், மது­பான பாவ­னை­யினால் 18 ஆயிரம் பேரும், ஏனைய போதைப்­பொருள் பாவ­னை­யினால் 2000 பேர் வரை­யிலும் உயி­ரி­ழக்­கின்­றனர். இந்த நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர வேண்டும் என்றால் இவற்­றுக்­கான விற்­ப­னையை குறைக்க வேண்டும். இந்­நி­லையில் அடுத்து பொதுத் தேர்தல் ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது . இதன்­போது மது­பான நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்கள் எவ­ருக்கும் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான அனு­ம­தியை கட்­சிகள் பெற்றுக்கொடுக்கக் கூடாது. அவ்­வாறு அவர்­களில் எவ­ராது போட்­டி­யிட்டால் மக்கள் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­காது நிரா­க­ரிக்க வேண்டும்.

பிரதி தலைவர் குப்­பி­யா­வத்தே போதா­னந்த தேரர் கூறி­ய­தா­வது ,

இன்று இளம் தலை­மு­றை­யி­னரை இலக்கு வைத்தே இந்த போதைப் பொருள் விநி­யோ­கங்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. போதைப் பொரு­ளுக்கு எதி­ராக பல்­வே­று­பட்ட முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும், மிக சூட்­சு­ம­மான முறையில் இந்த கடத்­தல்கள் இடம்­பெற்றுக்கொண்­டுதான் இருக்­கின்­றன. இந்­நி­லையில் எமது நாட்டின் எதிர்­கால சந்­த­தியை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும்.

எந்­த­வித போதைப் பொரு­ளையும் பயன்­ப­டுத்­தாத சிறந்த தலை­வ­ராக ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­பக் ஷ கிடைத்­துள்ளார் . இவ­ருடன் ஒன்­றி­ணைந்து போதைப் பொருள் அற்ற நாட்டை உரு­வாக்­கு­வ­தற்­காக அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். அதே­வேளை இளம் தலை­மு­றை­யினர் மத்­தியில் போதைப் பொருள் தொடர்பில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

இதன்போது இலங்கை மது ஒழிப்பு மகா சபையின் தலைவரான பேராசிரியர் இத்தேபானே தம்மாலங்கார தேரர், பிரதி தலைவர் குப்யாவத்தே போதானந்த தேரர், பிரதி செயலாளர் பத்தேரிய விமலஞான நாஹிமி, சட்டத்தரணி சாக்கிய நாணயக்கார மற்றும் விசேட வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

3 comments:

  1. Very GOOD Demand...

    Not only Liquor shop owners BUT Also KUDU Dealers too ..

    ReplyDelete
  2. குருநாகல் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, மிகப் பெரிய எதனோல்,மதுபானக்கடைகளின் அதிபதி, அவருக்கு தேர்தல் வாய்ப்புக் கொடுப்பது பற்றி சனாதிபதி, பிரதமரின் நிலைப்பாடு பற்றி அறிந்து கொள்ள இந்த நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

    ReplyDelete
  3. அப்படி யாருக்கும் வேட்புமனு வழங்காம விட்டா இந்த போதை பொருள் வியாபார m.p. மார் சேந்து தனியா ஒரு கூட்டணி அமைத்து போத்தல் சின்னத்தில் போட்டியிடுவார்கள் போலும்.

    ReplyDelete

Powered by Blogger.