Header Ads



வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய மட்டக்களப்பு, மதீனா ஹோட்டல் உரிமையாளர்

மட்டக்களப்பு நகரில் நீதிமன்ற வளாகத்தின் முன்னுள்ள மதீனா ஹோட்டல் உரிமையாளரே இவர். 
ஷோட்ஈட்ஸ் எதுவுமில்லை, காலை நேர இரவு நேர சாப்பாடும் இல்லை.
பகல் சாப்பாடு (நோமல் சாப்பாடு, பிரியாணி)மாத்திரமே இந்த ஹோட்டலில் கிடைக்கும்.
ஆனாலும் 12 மணி தொடக்கம் 3 மணி வரை கடை நிரம்ப கஸ்டமர்கள் நிரம்பி வழிவார்கள்.
அனைவரையும் அன்போடு,சிரித்த முகத்தோடு வரவேற்று வேக வேகமாக கவனிப்பதில் இவர் குறை வைத்ததே இல்லை.
குசினி அவ்ளோ சுத்தம்,வேலையாளர்கள் அத்தனை பேரின் முகத்திலும் சிரிப்பும் உற்சாகமும்.
அஜினாமோட்டோ அறவே இன்றி அவ்வளவு ருசியாக பகல் சாப்பாடு வழங்குகிறார்.
//சிறிய வயதில் ஒரு நேர சாப்பாட்டுக்குக்கூட வழியின்றி வாழ்நாட்களை வலிகளோடு கழித்த போது மனதில் அவர் கொண்ட இலட்சியம்”நான் நாலு பேருக்கு உணவு வழங்கும் மனிதனாக மாற வேண்டும்” என்பதாகவே இருந்தது என்கிறார் இவர்.
அவர் கொண்ட திடமான தூய்மையான எண்ணம் நனவாகி தசாப்தங்கள் பல கழிந்தாயிற்று.
அறுபது வயது தாண்டியும் அச்சொட்டாக இன்று வரை கடைப்பிடித்து வாழ்கிறார்.
வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிய மகான். டில்ஷான் அஹ்மத் ஏஆர் 

2 comments:

  1. வாழ்த்துக்கள் பெரியவரே !
    அல்லாஹ் உங்களை பொருந்தி கொள்வானாக ஆமீன்!

    ReplyDelete
  2. ஒரு தகவலுக்கு...
    சிலர் அஜினமோட்டோ போடுவதில்லை, ஆனால் சூப் கட்டி மட்டும்தான் போடுவதாக பெருமைகொள்கிறார்கள். சூப் கட்டியில் அஜினமோட்டொ உட்பட இன்னும் பல சுவையூட்டிகளும், இரசாயனங்களுமுண்டு என்பதை நினைவில் கொள்க.

    ReplyDelete

Powered by Blogger.