Header Ads



சஜித் பிரேமதாஸாவால் நிதி மோசடி, சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


மத்திய கலாசார நிதியத்தின் சீகிரியா திட்ட அலுவலகப் பணியாளர்கள் இன்று  (26) சீகிரியா பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2019ஆம் ஆண்டு குறித்த அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முற்பணத்தை வழங்குமாறும் இந்தாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிய கொடுப்பனவு முறையை செயற்படுத்துமாறும் கோரியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விடயத்துக்குப் பொறுப்பான முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸாவால் மத்திய கலாசார நிதியத்தின் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதால் இன்று நிதியத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதென, ஆர்ப்பாட்டக்காரர்கள்  தெரிவித்தனர்.

எனவே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலையீடு செய்து குறித்த நிதியைப் ​பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஐக்கிய பொது சேவை சங்கத்தின் செயலாளர் ஜீ.நிலந்த அஜித்,  சஜித் பிரேமதாஸ அமைச்சராகப் பதவி வகித்த போது மத்திய கலாசார நிதியத்தின் நிதி  ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடி செய்யப்பட்டுள்ளதென்றும் இதனால் புதிய கொடுப்பனவு முறைக்கு அமைய பணியாளர்களுக்கு கொடுப்பனவை வழங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

1 comment:

  1. Tourist area doing protest.modaya kewum kanda yodaya

    ReplyDelete

Powered by Blogger.