Header Ads



சஜித்தின் புதிய அரசியல் முன்னணிக்கு, தலைவராக செயற்பட்ட ரணில்

சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள புதிய அரசியல் முன்னணியில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பில் புதிய சர்ச்சையொன்று எழுந்துள்ளதாக அறியமுடிகின்றது.

” அப்பே ஜாதிக்க பெரமுன ” என்று அழைக்கப்படும் சஜித்தின் புதிய அரசியல் முன்னணி கடந்த ஜனாதிபதித் தேர்தலின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதன் தலைவராக நியமித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

” எங்கள் தேசிய முன்னணி” கட்சியின் மத்திய குழு 2019 செப்டம்பர் 23 அன்று கூடி நிர்வாகிகளை தெரிவு செய்து அதன் தலைவராக ரணிலையும் செயலாளராக ராஜிதவையும் நியமித்திருந்தது..

இந்த நிர்வாகிகள் தெரிவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப தேசிய முன்னணி கட்சி முடிவு செய்து அனுப்பிய கடிதத்திலும் ரணில் விக்ரமசிங்க தலைவர் என்ற ரீதியில் கையெழுத்திட்டுள்ளார்.

” எங்கள் தேசிய முன்னணி” கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க, உப தலைவராக கலாநிதி சேனக டி சில்வா மற்றும் செயலாளராக ராஜித சேனரத்ன நியமிக்கப்பட்டதையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் – அது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தேர்தல் ஆணைக்குவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பில் இன்று உத்தியோகபூர்வ கடிதமொன்றை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்ப ஐ தே க முடிவு செய்துள்ளது. sivaraja

No comments

Powered by Blogger.