Header Ads



சில மாவட்டங்களில் இணைந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சில மாவட்டங்களில் சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் இணைந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் தேர்தலில் எமது கட்சியை பொறுத்த வரை சில மாவட்டங்களில் இணைந்தும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடும் நிலை இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கூட்டு கட்சிகளுடனும் கலந்துரையாடி எமது கட்சிக்கும் பாதிப்பில்லாமல். மற்றவர்க்கும் பாதிப்பில்லாமல் சரியான ஒரு முடிவினை தேர்தலின் முன்னர் எமது கட்சி எடுக்கும்.

ஜக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாரிய கூட்டணி ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. அதில் பல கட்சிகள் புத்தியீவிகள் சிவில் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு பலமான ஒரு கூட்டு அமைப்பு உருவாக்குவதற்கான திட்டம் தீட்டப்படுகின்றது. 

அந்த கூட்டமைப்புடன் இணைந்து சில மாவட்டங்களில் போட்டியிடுவோம். சிலமாவட்டங்களில் தனித்து போட்டி இடதீர்மானித்திருக்கிறோம். இந்த விடயங்களை எமது கட்சியின் உயர்பீடம் கூடி முடிவினை எடுக்கும் என்றார்.

2 comments:

  1. கூட்டமைப்பாக குறிப்பாக முஸ்லிம் கூட்டமைப்பாக நின்றாலே வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளின் தொகையை தக்கவைப்பது சிரமமான சூழல் நிலவுகிறது. சில மாவட்டங்களில் தேசிய கூட்டமைப்பிலும் சில மாவட்டங்களில் தனித்தும் நிற்க்கும் முடிவு தற்கொலை முயற்சியாகும். குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் முஸ்லிம்களை முஸ்லிம்களே தோற்கடிக்கும் சூழல் ஏற்படும். மேலதிகமாக ராஜபக்சக்கள் ஒரு புறத்திலும் நணில் மறு புறத்திலுமாக சஜித்தின் இரண்டு கால்களையும் வாரிவிடுகிஅ சூழல் உருவாகிவருவதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. அது நல்லது ரிசார்ட் அவர்களே। உங்களைப்பற்றி விமலின் குற்றச்சாட்டு அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பரவுகின்றது। இதட்கு உங்கள் பதில் என்ன? இல்லாவிட்ட்தால் இது உண்மையாயின் உங்கள் அரசியல் வாழ்க்கையை இது மிகவும் பாதிக்கும்। அத்துடன் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கிறார்। உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்।

    ReplyDelete

Powered by Blogger.