Header Ads



சுவிற்சர்லாந்தில் இலங்கை பெற்றோர்களுடைய, பிள்ளைகள் பங்கேற்ற அல்குர்ஆன் போட்டி (படங்கள்)


ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம், ஏற்பாடு செய்திருந்த 2020 ஆம் ஆண்டுக்கான புனித அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சிகள் சனிக்கிழமை, 22 ஆம் திகதியன்று ஊர்டோர்ப் எம்ரிசால் மண்டபத்தில் நடைபெற்றது.

சுமார் 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்ற குர்ஆன் போட்டியில்,  வெளிநாடுகளை சேர்ந்த 2 மௌலவிகள் நடுவர்களாக பங்கேற்க, அதீதியாக ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் மூத்த உறுப்பினர் பௌமியும், அவரது துணைவியாரும் கலந்து கொண்டார்கள்.

இலங்கை மாணவர்களுடன், ஏனைய பல நாடுகளின் பிள்ளைகளும் குர்ஆன் போட்டியில் பங்கேற்று, தமது திறமையை வெளிப்படுத்தினர். குர்ஆன் போட்டிக்கு மேலதிகமாக கசீதா நாடகம் இஸ்லாமிய பாடல் போன்றனவும் நடைபெற்றன.

போட்டியில் திறமை காட்டியவர்களுக்கு, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவர் ஹனீப் மொஹமட் மற்றும் அதீதிகள் விருதுகளையும், அன்பளிப்புப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளை, இளம் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய அங்கத்தவர்கள் தொகுத்து வழங்கியதுடன், மஸ்ஜித்துல் ரவ்ளா குர்ஆன் மத்ரசாவில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







1 comment:

Powered by Blogger.