Header Ads



பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவருக்கும், கொரோனா வைரஸ் தொற்றினால் நல்லது

நாட்டுக்கு தேவை உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்க்கட்சி அல்ல எனவும் மக்களை நேசிக்கும் பலமான எதிர்க்கட்சியே தேவை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாணந்துறை குருப்புமுல்ல பிரதேசத்தில் இன்று 3 மாலை நடைபெற்ற நாட்டுக்காக தேவையான நாடாளுமன்ற என்ன? என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவம் தொடர்பான பெரிய போராட்டம் நடக்கின்றது. நான் சாதாரண தரம் படிக்கும் போது ரணில் அந்த கட்சியின் தலைவர்.

உயர்தரம் படிக்கும் போதும் அவரே தலைவர். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடத்தில் இருந்தேன் அப்போதும் அவரே தலைவர்.

மருத்துவராகி, மாகாண சபை உறுப்பினராகி தற்போது நாடாளுமன்றத்தில் நான்கு ஆண்டுகள் இருக்கின்றேன். இப்போது ரணில் விக்ரமசிங்கவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கின்றார். இந்த பிரச்சினை தீராது.

பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒரு அணி அரசாங்கத்துடன் இணையும். கட்சி தாவ உள்ளவர்களுக்கு சஜித் பிரேமதாச ஏற்கனவே மறைபொருள் ஒன்றை கூறியுள்ளார்.

கோட்டாபயவுக்கு பொருத்தமான பிரதமர் தான் என சஜித் கூறுகிறார். இந்த கதையை அஜித் பீ. பெரேரா ஆமோதித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கிய 55 லட்சம் வாக்குகளை பொதுத் தேர்தலிலும் வழங்கினால் மக்கள் அனாதரவாகி விடுவார்கள்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் நல்லது என இணைத்தளத்தில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

கொரோனோ வைரஸ் வரவில்லை என்றால் தொலைக்காட்சிகளின் தற்போது குரல் பதிவுகள் பற்றி அதிக நேரம் பேசுவார்கள். அப்படியான நாடு இது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரு வாரம் செல்லும் முன்னர் இந்தியாவுக்கு சென்று ஹம்பாந்தோட்டை துறைமுகம் தவறுதலாக சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தவர் அவரது அண்ணன். இதனையே மறுநாள் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹெலஸ்டியா வேல்ஸிடம் வேறு வார்த்தைகளில் கூறினார்.

இந்தியா, சீனா நாடுகளின் பிரதிநிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது இலங்கை பிரதிநிதிகள் அருகில் இருந்தனர். எனினும் அமெரிக்க பிரதிநிதியிடம் பேசும் இலங்கை பிரதிநிதிகள் இல்லை. இது குறித்த பிரச்சினை இருக்கின்றது.

பொதுத் தேர்தலின் பின்னர் சோபா உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ளனர். எம்.சீ.சீ உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திட போவதாக கூறியது.டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் கையெழுத்திடுமாறு அமெரிக்க கூறியது.

தற்போது அதில் கையெழுத்திட கோட்டாபய கால அவகாசம் கோருகிறார். காலஅவகாசத்தை தருவதாக அமெரிக்க கூறுகிறது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.