Header Ads



கொரோனா வைரஸ் பாதிப்புகளை, சீனா மறைப்பதாக குற்றச்சாட்டு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உண்மைகள் மறைக்கப்படுவதாக ஹொங்கொங் பல்கலைக்கழகம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சீனா வெளியிடும் தகவல்களில் உண்மையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 14300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் 75 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் 300இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் 2500க்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும் என ஹொங்கொங் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது. வுஹானில் மாத்திரம் 75000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஹொங்கொங் பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது.

வுஹானில் வாழ்பவர்களுகு்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்திற்கு ஒருவர் என ரீதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வெளியே வந்து உணவு உட்பட்ட பொருட்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

இதேவேளை, பல நாடுகள் சீனாவுக்கு தங்கள் கதவுகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சீன நாட்டவர்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. எனினும் உலக நாடுகளின் இந்த செயற்பாட்டை அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.