Header Ads



சீனா, கொரியாவில் இருந்து வந்துள்ளவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம்

சீனா மற்றும் தென் கொரியாவில் இருந்து இங்கு வந்துள்ள 1000 ற்கு மேற்பட்டோர் தற்பொழுது சுகாதார அதிகாரிகளினால் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனித் யாசிங்க இது தொடர்பாக தெரிவிக்கையில் அவர்கள் தங்கியிருக்கும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் உள்ள பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் மூலம் இவர்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தென் கொரியாவில் இருந்து வரும் இலங்கையர்கள் தொடர்பில் விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.