Header Ads



சஜித்தின் புதிய முன்னணியில் சுதந்திர, கட்சியின் ஒரு பிரிவினரும் இணைவர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் தாம் அமைக்கப் போகும் புதிய முன்னணியில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசவின் புதிய முன்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும், புதிய அரசியல் கட்சிகளும் இணையவுள்ளதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த புதிய முன்னணிக்கு வேறு பெயரும், சின்னமும் அவசியமாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

புதிய முன்னணியை அமைப்பது மற்றும் ரஞ்சித் மத்தும பண்டாரவை முன்னணியின் செயலாளராக நியமிப்பது போன்ற விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கீகாரம் பெறவேண்டும் என்பது தற்போது முக்கியம் இல்லை.

ஏனெனில் அந்த செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் கட்சியின் நாடாளுமன்றக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அவர்கள் மத்தும பண்டாரவை அங்கீகரித்துள்ளனர். எனவே பொது செயற்குழுவில் எவரும் இந்த யோசனையை எதிர்க்கப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

4 comments:

  1. BANKRAPT POLITITIONS HAVE
    ONLY TWO OPTIONS,EITHER TO
    JOIN SAJITH OR BE AT HOME
    FOREVER.BCOZ OTHER PARTIES
    WILL NOT TAKE THEM.

    ReplyDelete
  2. SAJITHGE KUNU BAKKIYATA ONA
    DEYAK DAANDA PULUVAN.

    ReplyDelete
  3. THIS TIME TOO HE MAY GIVE SANITORY
    TOWELS TO LADIES FREE OF CHARGE.

    ReplyDelete
  4. சஜித் அவர்களின் முன்னணியில் ரணிலையும் ஐ.தே.க செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் இணைய மாட்டார்கள். ஆனால் பூட்டின், ரம்ப் உட்பட உலகில் உள்ள அனைவரும் இணைவார்கள். உலகின் முக்கியமான நாடுகள் பலவற்றின் பிரதமராக சஜித் புகழ்பெறுவார் என அவரை சுற்றி இருக்கும் தமிழ் பேசும் ஆதரவாளர்கள் எல்லோரும் நம்புகிறார்க்கள். சஜித்துக்கு அமரிக்கா ரூசியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் அமோகமான செல்வாக்கு உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.