Header Ads



கொரோனா வைரஸ்,, இறுதி சடங்குக்கு அனுமதி மறுப்பு, சடலங்களை உடனடியாக எரித்துவிட உத்தரவு

கொரோனா வைரஸ் (NCoV2019) காரணமாக சீனாவில் 305 பேரும் பிலிபெயின்ஸில் ஒருவரும் இறந்துள்ளனர். இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இறப்பவர்களின் உடல்களை உடன் தகனம் செய்யும்படி சீனாவின் தேசிய சுகாதார ஆணையம்  அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் இறந்தவர்களின் சடலங்களுக்கு இறுதி சடங்குகள் செய்வதையோ அடக்கம் செய்தல் அல்லது சடலங்களை இடமாற்றுவதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்காக இந்த கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.