Header Ads



சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்புக்கப்படுகிறது - சத்தார்

- இக்பால் அலி -

சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமான அறிவித்ல் தற்காலிமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளது.  அதை விரைவில் வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பான கருத்து தெரிவிக்கையில்,

எதிர்கட்சியின் சுயநல அரசியல் இலாபத்தைக் கருத்திற் கொண்டு சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற சபை வழங்கப்பட்டமை தொடர்பில் சமூக வலைவத்தளங்களில் இனவாத ரீதியிலான எதிர்ப்புணர்வு வாதங்களை முன் வைத்து பரப்புரை செய்தமையினாலேயே சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்திற்கான வர்த்தகமானி அறிவித்தல்  மீளவும் இடை நிறுத்தப்பட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

எதிர் கட்சியினர் தாங்கள் சாய்ந்தமருது மக்களுக்கு  உள்ளுராட்சி  மன்ற சபை வழங்குவோம் என்று பல விடுத்தம் தேர்தல் காலங்களில் வழக்கம் போன்று வாக்குறுதி வழங்கி விட்டுச் செல்வார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கடந்த அரசாங்கத்துடன் இருந்தனர். கடந்த ஆட்சியில் வழங்கியிருக்கலாம். ஆனால்  அவர்கள் அதனை அரசியல் இலாபம் கருதியே; வழங்கவில்லை.

எனினும் ஜனாதிபதித் தேர்தலின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்று சாய்;ந்தமருதுக்கான நகர சபையைத் தருவோம் என்று கூறிய வாக்குறுதிக்கு இணங்க கடந்த 14 ஆம் திகதி வெளியிட்ட விசேட வர்த்தமானியில் சாய்ந்தமருது நகர சபையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் அரசாங்கம் ஒரு நாட்டைக் கொடுத்தது போன்று தங்களுடைய சமூக வலைத்தளங்களில் அரசாங்கம் கடுமையான விமர்சனங்களை சிங்கள சமூக வலைத்தளங்களில் பதிவு  செய்தார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிந்த விசயம்.

இந்த விசமப் பிரச்சாரத்தின் காரணமாக சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமான அறிவித்ல் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  அதை விரைவில் வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Brother Abdul Sattar has been with the Rajapaksa family as a loyal and ardent supporter for many years. He knows best the intentions of the Rajapaksa brothers than the Munafique Muzammil who is craving to contest Kurunegala under the SLPP ticket and is going around begging for support from various community leaders. Even if the Muslims DO NOT vote the SLPP/SLFP and their Alliance, Brother Abdul Sattar may be vouching for the truth, Insha Allah. What he is saying about Sainthamaruthu local government status should be given a listening year by the Muslim community and voters of Sainthamaruthu.
    HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. SAINTHAMARUTHU YOUTH SHOULD COME FORWARD TO JOIN THE SLPP/SLFP ALLIANCE AND CONTEST THE FORTHCOMING GENERAL ELECTIONS IN THE EASTERN PROVINCE AND WORK TOWARDS GETTING THE MUSLIM VOTE BANK TO BRING IN THE 2/3 MAJORITY IN PARLIAMENT, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.