Header Ads



ஸஹ்ரானின் சகோதரிக்கும், மைத்துனருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரானின் சகோதரி மற்றும் மைத்துனன் ஆகிய இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார். 

குறித்த குண்டு தாக்குதலை ISIS பயங்கரவாத அமைப்பின் ஸஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். 

இந்த சம்பவத்தையடுத்து ஸஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைதில் வைத்து அவரின் சகோதரியான முகமது காசிம் முகமது மதனியா மற்றும் அவரது கணவராக முகமது நியாஸ் ஆகியோரை கடந்த 2019 ஆண்டு மே மாதம் 1 ம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன் 20 இலட்சம் ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டனர். 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இவர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டு CIDயினர் விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் இவ் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 12 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.