Header Ads



ஐக்கிய தேசிய முன்னணிக்கு பதில் புதிய பெயரையும், சின்னத்தையும் செயற்குழு ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்ற கூட்டத்தின் போது சஜித் பிரேமதாச தலைமையிலான முன்னணியின் செயலராக ரஞ்சித் மத்தும பண்டாரவை பொது செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

எனினும் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கு பதில் புதிய பெயரையும், சின்னத்தையும் பொது செயற்குழு ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனை அடுத்தே சஜித் பிரேமதாச பொது செயற்குழுவில் இருந்து வெளியேறினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய முன்னணிக்கு புதிய பெயரை பரிந்துரை செய்திருந்த சஜித் தரப்பு சின்னமாக மஞ்சள் நிற இதயத்தை பரிந்துரைத்திருந்தது.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தரப்பு யானை சின்னத்தையும், கட்சியாக ஐக்கிய தேசிய முன்னணி என்பதையும் வலியுறுத்தியது.

No comments

Powered by Blogger.