Header Ads



பாராளுமன்றத் தேர்தல்,, இப்படியும் ஒரு சாதனை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வரலாற்றிலேயே முதற் தடவையாக மிக கூடுதலான புதிய கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 143 புதிய அரசியல் கட்சிகள் அவற்றின் பதிவுக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு ஊடக தரப்புக்குத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான இறுதித் தினமாக கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு மொத்தம் 143 புதிய அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்து பதிவுக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவில் ஏற்கனவே 70 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கேற்ப எதிர்வரும் பொதுத் தேர்தலில் 200இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் இலங்கையின் வரலாற்றிலேயே மிகக் கூடுதலான அரசியல் கட்சிகள் முதற் தடவையாக போட்டியிடும் தேர்தலாக எதிர்வரும் பொதுத் தேர்தல் அமையும் எனவும் தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான இறுதித் தினம் கடந்த 17ஆம் திகதி முடிவடைந்த நிலையில் அதுவரை புதிய அரசியல் கட்சிகளிலிருந்து கிடைத்த பதிவுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தரப்பில் தெரியவந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான தகைமைகளைப் பற்றிய அறிவித்தலை மார்ச் மாதம் ஆரம்பத்தில் வெளியிடக் கூடிய சாத்தியம் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 comment:

  1. அதிக லாபம் தரும் துறைகளில் எல்லாம்
    அதிகரித்த முதலீடுகள் வருவது இயல்பே

    ReplyDelete

Powered by Blogger.