Header Ads



தீவிர மந்திராலோசனையில் பசில்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

தனித்துப் போட்டியிடுவதால் வேட்புமனுப் பங்கீடு, தேசியப் பட்டியல் எம்.பி. நியமனப் பகிர்வு உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும், தேர்தலின் பின்னர் பங்காளிக் கட்சிகள் இணைந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தையும் பெறலாம் எனவும் கணிக்கப்படுவதாகத் தெரியவருகின்றது.

இதன்படி கட்சிகளைத் தனித்தனியாகப் போட்டியிட வைத்து தேர்தலின் பின்னர் அவர்களை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைத்துக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் வேட்பாளர்களாகப் போட்டியிட பலர் முன்வந்துள்ளமையும், தேசியப் பட்டியல் நியமனம் பெற பலர் காத்திருக்கும் சூழ்நிலையும் இந்த யோசனைகளுக்கான காரணம் என அறியமுடிகின்றது.

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச கட்சி முக்கியஸ்தர்களிடம் மந்திராலோசனைகளை நடத்தி வருகின்றார்.

2 comments:

  1. The decission taken will be most welcome by the Muslim Vote Bank. MUNAFQUES AND HOODWINKERS SHOULD BE POLITICALLY DRIVEN AWAY FROM THE POLITICAL PLAYING FIELD OF SRI LANKA FOR THE MUSLIM COMMUNITY TO PROSPER IN THE COMMING YEARS, Insha Allah.
    Please read this news below: https://www.tamilwin.com/politics/01/238059?ref=home-feed
    பொதுஜன பெரமுனவில் இணைய முயற்சித்த பைசர் முஸ்தபா! நிராகரித்த பிரதமர்
    தன்னை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா விடுத்த கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

    இந்த சந்தர்ப்பத்தில் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதில்லை எனவும், இது தொடர்பில் பின்னர் ஆராயலாம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

    பைசர் முஸ்தபாவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்து கொள்வதை அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

    HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. MR.NOOR NIZAM YOUR PROPOSALS ARE GOOD.IN YOUR COMMUNITY THERE ARE LEADERS EVERY WHERE.
    RISHARD-MANNAR
    ATHAULLA-AKKARIPATTU
    HARRIS-KALMUNAI
    HABIR CAASIN-MANANELLA
    FOWZE-COLOMBO
    HAKEEM-KANDY
    AZAD SALLY-ALL SRI LANAKA
    THEY WILL NEVER GIVE A CHANCE TO YOUNG PEOPLE.

    ReplyDelete

Powered by Blogger.