Header Ads



'ரணிலை புறக்கணித்து பயணிக்க நாம் தயாராகவில்லை' : எரான் விக்கிரமரத்ன

(ஆர்.விதுஷா)

ஐக்கியதேசிய கட்சி ஜனநாயகத்தை பின்பற்றுகின்றமையினாலேயே தலைமைத்துவம் தொடர்பில் விவாதங்களை  நடத்தக்கூடியதாகவிருக்கின்றது.

ஐ.தே.கவின்  தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை புறக்கணித்து விட்டு  பயணிப்பதற்கு தயாராகவில்லை. மாறாக  ஜனநாயகத்தின் அடிப்படையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதே அனைவரதும்  விருப்பாகும் என ஐக்கியதேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமசிங்க  தெரிவித்தார்.  

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் 6 பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும்  கூறியதாவது ,   

ஐக்கிய தேசிய கட்சியில் மாத்திரமே தலைமைத்துவம் தொடர்பில்  விவாதம் மேற்கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது. ஏனைய கட்சிகளில்  விவாதத்தை மேற்கொள்வதற்கு ஏதுவான வழிகள் இல்லை. 

ஐக்கிய தேசிய கட்சியினுள் ஜனநாயகம் நிலவுகின்றது. அதன் அடிப்படையில் ஜனநாயக உரிமை ஒவ்வாருவருக்கும் உள்ளது. உரிய  தருணத்தில் எமது கருத்துக்களை முன்வைப்பதற்கு ஏதுவான வழிவகைகள் உள்ளன.  

சுதந்திர கட்சியில் பண்டார நாயக்க தரப்பினர் இருந்தனர். பின்னராக சூழ்சியை மேற்கொண்டு மஹிந்த தரப்பினர் அந்த கட்சியை  கைப்பற்றிக்கொண்டனர்.

இந்நிலையில் மஹிந்த தரப்பினருடைய கட்சியினுள் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்கள் அவர்களுடைய  குடும்பத்தாருக்கு பதவிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலேயே உள்ளது.

அவர்கள் குடும்ப ஆட்சியை வலுப்படுத்தும் வகையிலான  கலந்துரையாடலேயே  தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர். இது நாட்டு  மக்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையாகும்.

எவரேனும்.,பொதுஜன பெரமுனவில்  இணைந்து கொள்ள செல்வார்களாயின் அவர்களுக்கு அந்த கட்சியின்  ஊடாக அவர்களுடைய  எந்த எதிர்பார்ப்புக்களும் நிறைவேறாது என்பதனை கூறிக்கொள்ள  விரும்புகின்றோம் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.