Header Ads



இந்து சமுத்திரத்தின் முத்து

.சத்தார் எம் ஜாவித். 
இலங்கையின் 72வது சுதந்திர தினம் இன்று மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இலங்கையர் என்ற வகையில் நாம் பெருமிதம் கொள்கின்றோம். இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் இதனை கொண்டாடுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம்.
ஏனைய நாடுகளைவிடவும் இலங்கை சுதந்திரம் பெற்ற விடயத்தில் ஒருபடி மேலேயே நிற்கின்றது என்றால் அது மிகையாகாது. காரணம் இரத்தம் சிந்தாது அந்நியர்களினால் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மிகவும் பெறுமதி மிக்க பொக்கிசம் சுதந்திரம் என்றே கூறலாம்.
இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் இலங்கை ஏனைய நாடுகளைவிடவும் நிலப்பரப்பினால் சிறிய நாடு என்றே கூறலாம் அத்துடன் மிகவும் குறைந்த சனத்தொகையையும் கொண்ட நாடு என்பதும் இவ்வாறானதொரு நாட்டிற்கு எமது தலையீடுகளோ அல்லது எமது ஆட்சியோ இனித் தேவையில்லை இந்த நாட்டு மக்களே இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற ஒரே நோக்குடன் பெருமனதுடன் ஆங்கிலேயர் இலங்கையரிடம் சகல பொறுப்புக்களையும் கையளித்த விடயம் இலங்கைக்கு கிடைத்த பெரும் வரப்பிரதாசமாகும்.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற சுதந்திரம் முக்கியமாக இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் எந்தவித பாகுபாடும் இன்றிக் கிடைக்க வேண்டும் என்பதே நியதியாக இருந்தது. என்றாலும் அந்த நியதி ஒருசில பேரினவாத சக்திகளால் கொச்சைப்படுத்தப்பட்டு இந்த நாட்டில் இன மற்றும் சமய ரீதியிலான பிரிவினைக்கும், குழப்பத்திற்கும் வித்திட்டது என்பதே கவளைக்குரிய விடயமாகும்.
ஒருசிலரது கடும்போக்குவாத என்னங்கள் இந்த நாட்டின் சுய கௌரவம், மரியாதை என்பனவற்றிற்கு குந்தகத்தன்மையை ஏற்படுத்தி விடட்டது. இதன் காரணமாக இன்று பல்லின சமுகங்களும், பல்லின சமய மக்களும் வாழும் இந்த நாட்டில் ஒருவரையொருவர் கழுகுக் கண் கொண்டு பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைமைகளை தோற்று வித்துவிட்டது எனலாம்.
சுதந்திரம் கிடைத்து சுமார் 8வருடங்களில் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களை ஓரங்கட்டும் விடயம் அரங்கேறியது. அதாவது 1956ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஒருசில பேரினவாத அரசியல் தலைமைகளால் இந்த நாட்டின் மொழி சிங்களம் என்ற வகையில் ஒரு தலைப் பட்சமாக சிங்கள மொழிச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். இது  இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரியதொரு நெருக்கடி நிலைமைகளையும் பெரும்பான்மை மக்களிடத்தில் இருந்து வேறுபடுவதற்கும் வித்திட்டது எனலாம். குறிப்பாக சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்ற விடயம் இந்த நாட்டின் அமைதி, சமாதானம், சமத்துவம் என்பனவற்றிற்கு எதிரியாக மாறிவிட்டது எனலாம்.
இவ்வாறு தனிச்சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வந்ததன் காரணமாக இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பாரிய இடர்களையும், துன்பங்களையும் எதிர் கொள்ள வைத்து இன்று இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் இனவாத பிரச்சினைகளுக்கு வழி சமைத்து விட்டது எனலாம்.
சிங்களம் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டதில் இருந்து பல ஆண்டுகளாக சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது சுதந்திரத்தை பறிகொடுத்த நாளாகவே கருதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது அதில் நாட்டம் இல்லாது ஒரு வகையான மன உழசை;சலுக்கு உட்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் தமிழும் அரசினால் அங்கீகரிக்கப்பட்டு சிங்களத்துடன் தமிழும் அரச கரும மொழி என்ற விடயம் சிறுபான்மை மக்களை ஓரளவு நிம்மதியும், சந்தோசமும் அடைய வைத்துள்ளது. 
இவ்வாறு தமிழும் அரச கரும மொழியாக பிரகடனப் படுத்தப்பட்டாலும் அது பூரணத்துவம் கொண்டதாக அமைய வில்லை. ஒருசில சந்தர்ப்பங்களைத் தவிர அது பேரளவில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டது. என்றாலும் உள்ளதைக் கொண்டு தமிழ் பேசும் மக்கள் ஓரளவு திருப்தி கண்டனர்.
குறிப்பாக கடந்த பல வருடங்களாக அரசாங்கத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் சுதநத்திர தினக் கொண்டாட்டங்களின் போது தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது சிறுபான்மை மக்களுக்கு ஓரளவு திருப்தியைக் கொடுத்தது எனலாம்.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் சிங்கள மொழியை தாய் மொழியாகக் கொண்டுள்ள சிங்கள மொழி பேசும் மக்களுடன் ஒரே நாடு, ஒரே தாய்ப்பிள்ளைகள் என்ற வகையில் வாழும் நிலையில் மீண்டும் தமிழ் மொழி மீண்டும் புறக்கணிக்கப்படும் நிலை தென்படுவது கவளைக்குரிய விடயமாக மட்டுமல்லாது அரசியல் ரீதியிலான பிரச்சினைகளாகவும் காணப்படுகின்றது.
இன்று நடைபெறும் 72வது தேசிய தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படக் கூடாதென்று ஒருசில பேரினவாத அரசியல் வாதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது தமிழ் பேசும் மக்களை இவர்கள் ஓரங்கட்டுகின்றார்கள் என்ற விடயமே மேலோங்கி நிற்கின்றது. இந்த மக்களை மிகவும் மன வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கின்றது. 
இன்று தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படா விட்டால் அது எதிர் காலத்தில் அரசியலில் மாற்றங்களைக்கூட ஏற்படுத்தலாம். காரணம் தமிழ் அரச கரும மொழி என அரசியலமைப்பில் உட்படுத்தப்பட்டதன் பின்னர் அதனை புறந்தள்ளுவது ஜனநாக விழுமியங்களுக்கு முற்றிலும் பாதகமான அல்லது விரோதமான செயற்பாடுகள் என்றே கூறலாம்.
இந்த நாட்டில் வாழும் பல்லின சமுகங்களும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும், புரிந்துணர்வுடனும் வாழ வேண்டுமானால் அரசாங்கமும், ஜனாதிபதியும் இனவாத சக்திகளுக்கு விலை போகாமல் சகலரும் இந்த நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 04ஆம் திகதி கிடைத்த சுதந்திரத்தை நிலைபெறச் செய்ய வேண்டும். 
சிறுபான்மை மக்களின் அபிலாசைகள், அவர்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
எனவே இன்று ஏற்பட்டுள்ள தேசிய கீதப் பிரச்சினையை ஜனாதிபதி அவர்கள் முறியடித்து இந்த நாட்டின் இன ஐக்கியத்திற்கும் நிலையான சமாதானத்திற்கும் உத்தரவாதமளித்து சுதந்திர தின நிகழ்வில் சிங்களம் போன்று தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு சகலரும் ஒற்றுமையாக வாழக் கூடிய சகஜ நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பாகும்.

2 comments:

  1. ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களவரும்
    சிங்களவரிடம் இருந்து தமிழரும்
    தமிழரிடம் இருந்து முஸ்லிம்களும்
    பெறும் சுதந்திரம் வெறும் கண் துடைப்பே

    ஆனாலும் எவர் ஒருவர் ஆண்டாலும்
    அவர் உமர் போன்று ஆண்டு அதை
    ஆண்டாண்டு தொடர விடுவரோ
    அன்றே தொடரும் நமது சுதந்திரம்

    ReplyDelete
  2. இலங்கையின் அரசியல் வாதிகளினதும்,ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களின் பேராசை, களவு, பொய்,புரட்டு,அரச சொத்துக்களை எந்தவிதமான எல்லைகளும் இன்றி களவாடி கள்ள வங்கிக்கணக்கில் வைத்தல், சீசெல்ஸ் போன்ற நாடுகளில் களவாடிய சொத்துக்களைப் பதுக்கிவைத்து நாட்டு மக்களுக்கு மென்மேலும் கஷ்டங்களையும் துன்பங்களையும் அதிகரித்து, நாட்டை அதிகாரமிக்க நாடுகளுக்கு அடகுவைத்து, வேறு நாடுகளில் கடன் வாங்கி ஏற்கனவே பட்ட கடன்களுக்கு வட்டி கட்டும் இழிநிலைக்கு நாட்டைக் கொண்டு சென்று பெரிய டாம்பீகமாக சுதந்திரம் கொண்டாடுவது உலக அரங்கில் இலங்கைக்கு அவமானம் மட்டுமல்ல இந்த நாட்டு மக்களை மென்மேலும் கேவலத்துக்கும் அவமானத்துக்கும் வறுமைக்கும் இட்டுச் செல்லும் இந்த நாட்டின் ஆட்சியில் உள்ள அரசியல் பேராசைப்பித்து பிடித்த அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளி சீதாவாக்ைக படுகுழியில் புதைத்து இந்த நாட்டுக்கு நேர்மையும் கற்ற இளைஞர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.