Header Ads



ஜனாதிபதியின் கவனத்துக்கு சென்ற, சவுதி அரசாங்கத்தின் வீடுகள் - ஒரு மாதத்திற்குள் தீர்வு


சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவுதி அரசாங்கத்தின் நிவாரணத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சுமார் 500 வீடுகள் இன்னும் உரிய மக்களிடம் கையளிக்கப்படவில்லை என்று அமைச்சுக்களின் செயலாளர்களின் தேசிய அமைப்பின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி தொகுதியிலேயே குறித்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகள் 100 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை என்றும் கொழும்பு , வோன்டர் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

சில அதிகாரிகளின் அழுத்தங்களின் பிரகாரமே இந்த வீடுகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாமலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அதற்கமைய இது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கேற்ப எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் இந்த வீடுகளை மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஓர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட   ஜனாதிபதியின் ஆண்மையை அளவிடுவதற்கான கால அளவு ஒரு மாதம்.

    ReplyDelete
  2. அவை குறிப்பாக சுனாமியால் பாதிக்கப்பட்டு அதுவரை வீடுகள் இல்லாமல் தவிர்த்த பெரும்பான்மையான முஸ்லிம்கள், தமிழ் குடும்பங்களுக்காக முன்னாள் அமைச்சர் பெரியல் அஷ்ரபின் முயற்சியால் சவூதி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. எனவே, வீடுகள் வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட, யாருக்காகக் கட்டப்பட்டதோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.