Header Ads



இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 72வது சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் 72வது சுதந்திர தின கொண்டாட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை (04.02.2020) 8 மணியளவில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்தது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. இதன்போது பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிதியாளர், பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் குழுவினரால் சுதந்திர தினத்திற்கான மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது. அடுத்த நிகழ்வாக பல்கலைக்கழகத்தின் கிழக்குப் புறத்தில் அமைந்திருக்கும் விரிவுரையாளர்களுக்கான விடுதிக்கு அருகாமையில் சுதந்திர தினத்தினை கௌரவிக்கும் முகமாக மர நடுகையும் இடம்பெற்றது.

“ஒரு பாதுகாப்பான தேசம் - ஒரு வளமான நாடு” எனும் கருப்பொருளில் கொண்டாடப்படும் இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தினர்கள் மிக மகிழ்சியுடன் பங்கேற்றனர். உள்நாட்டு சிவில் யுத்தத்திற்குப் பின்னரான இலங்கைத் தேசம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வளமான நாடாக  மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது. இவ்விலக்கினை அடைந்து கொள்வதற்காக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் ஏனைய அரசியல் தலைவர்களினதும் பொது மக்களினதும் பங்குபற்றுதலுடன் கூடிய வளமான நாட்டினை கட்டியெழுப்புதல் இன்றியமையாததாகும்.

ஊடகப் பிரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்.


No comments

Powered by Blogger.