February 25, 2020

இலங்கை முஸ்­லிம்­களில் நூற்­றுக்கு 2 வீத­மானோர் அடிப்­ப­டை­வாத கருத்­து­களில் தீவி­ரம், தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமை­ய­லா­ம்

இலங்கை வாழ் முஸ்­லிம்­களில் நூற்­றுக்கு இரண்டு வீத­மானோர் அடிப்­ப­டை­வாத கருத்­து­களில் தீவி­ர­மாக உள்­ள­தா­கவும் இந்­நி­லைமை எதிர்­கா­லத்தில் நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமை­ய­லா­மென்றும் தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அடிப்­ப­டை­வாத கருத்­து­க­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்ள இந்த முஸ்­லிம்­களை அந்த அடிப்­ப­டை­வாத மனோ­நி­லை­யி­லி­ருந்தும் விடு­விக்க வேண்டும். அதற்­கென பாது­காப்பு அமைச்சு, சமூகம் மற்றும் உள­வி­ய­லா­ளர்கள் ஒன்­றி­ணைந்து வெகு­வி­ரைவில் வேலைத்­திட்­ட­மொன்­றினை ஆரம்­பிக்க வேண்­டு­மெ­னவும் பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அடிப்­ப­டை­வா­தி­களை இனங்­கா­ணு­வ­தற்கு சமூ­கத்தின் ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொள்­வ­துடன் பொலிஸ் மற்றும் இரா­ணுவ உளவுப் பிரிவின் தக­வல்­க­ளையும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

அடிப்­ப­டை­வா­தி­களை அடிப்­படை வாதத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுக்கும் வகை­யி­லான முன்­னேற்­ற­க­ர­மான வேலைத்­திட்­ட­மொன்று இந்­தி­யாவில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. அவ்­வா­றான வேலைத்­திட்­ட­மொன்­றினை எமது நாட்­டிலும் நடை­மு­றைப்­ப­டுத்த முடியும் எனவும் அக்­குழு பரிந்­துரை செய்­துள்­ளது.

தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு பயங்­க­ர­வா­தத்தை ஆரம்­பத்­திலே அழித்­தொ­ழிப்­ப­தற்­கான சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கை­யொன்­றினை கடந்த 19 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­தி­ருந்­தது. அந்த அறிக்­கை­யிலே இவ்­வி­ப­ரங்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

புதிய பயங்­க­ர­வாதம் மற்றும் அடிப்­ப­டை­வாதம் தொடர்­பாக தேசிய ரீதியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய ஏற்­பா­டுகள் மற்றும் அடிப்­ப­டை­வா­தத்தை இல்­லாமற் செய்­வ­தற்­கான செயற்­திட்­டங்கள் பற்­றிய அறிவு மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவ­தானம் செலுத்­தப்­பட வேண்டும். இதற்­கென பல்­க­லைக்­க­ழ­கங்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்றனவற்றின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்று துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மலிக் ஜயதிலக செயற்பட்டு வருகிறார்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

4 கருத்துரைகள்:

அடிப்படைவாதம் என்றால் என்ன என்பதை முதலில் விளக்குங்கள்.
அடிப்படைவாதத்தில் சிங்கள பொளத்தர்கள் இல்லாமலா முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிராக அடிக்கடி இந்நாட்டில் அடாவடிகள் நடக்குது? அப்போ, உண்மையாக யார் அடிப்படைவாதிகள், பொளத்தர்களா இஸ்லாமியர்களா?
මූලධර්මවාදය යනු කුමක්දැයි පළමුව පැහැදිලි කරන්න.
මූලධර්මවාදයේ සිංහල නොමැතිව මුස්ලිම්වරු බොහෝ විට මේ රටේ හින්දු භක්තිකයන්ට එරෙහි හිංසනයන්ට යොමු වෙති ද? ඉතින්, යථාර්ථවාදීන්, මූලධර්මවාදීන්, ඉස්ලාම්වාදීන් කවුද?

This is lie and fabrication. There is no Muslim in Sri Lanka now who support extremism. All who are connected are behind the bar and many of them are innocent who are behind the bar. do not generalise this. All radicals are dead now. who supported them and who gave them all weapons.?

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;

தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;

நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

(அல்குர்ஆன் : 2:208)
www.tamililquran.com

பாலஸ்தீனத்தில் தொடங்கி மியன்மார், சீனா, இந்தியா, என்ற தொடரில் .... இலங்கையையும் விட்ட இடத்திலிருந்து தொடரச்செய்யும் சூழ்ச்சியே இந்தக்குற்றச்சாட்டு!

Post a Comment