Header Ads



SMS மூலம் வாழ்த்தனுப்புவதை தவிர்த்த ஜனாதிபதி, எதிர்க்கட்சி சார்பில் வாழ்த்துக்கூற எவருமில்லை

குறும்தகவல்கள் மூலம் புத்தாண்டு வாழ்த்து செல்லும் நடைமுறையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் இன்று புதுவருட கொண்டாடங்கள் இடம்பெற்று வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு குறுந்தகவல் மூலம் ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்கவில்லை.

கடந்த சில வருடங்களாக ஆங்கில மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள் குறுந்தகவல்கள் மூலம் ஜனாதிபதியின் பேரில் கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும்.

ஜனாதிபதிக்கு மேலதிகமாக பிரதமரும் இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்தினை குறுந்தகவல் மூலம் அனுப்பி வரும் பழக்கத்தினை கொண்டிருந்தார்.

எனினும் இம்முறை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறு வாழ்த்து தெரிவிப்பதனை நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் முறைப்படி வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இம்முறை எதிர்க்கட்சி தலைவர் ஒருவரது புத்தாண்டு வாழ்த்து அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.