Header Ads



முஸ்லிம் Mp யை பெறாவிட்டால், முஸ்லிம்களை கௌரவப்படுத்தும் ஆளுநர் பதவியை இழக்க நேரிடும்

இம்முறை இடம்பெறும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன முன்னணயில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநித்தவம் ஒன்றை பெற்றுக் கொள்ளாவிட்டால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்தி வழங்கப்பட்ட வடமேல் மாகாண ஆளுநர் பதவியை இழக்க நேரிடும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார். 

வடமேல் மாகாண முதல் அமைச்சின் மஹாகெதர இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியவாளர் சந்திப்போது வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் 

இம்முறை பொதுத் தேர்தலில் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட நான்  குருநாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன். 

 இந்த தருணத்தில் குருநாகல் மாவட்ட சமூகம்  ஆளும் தரப்பில் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை  சிந்தித்துபெற்றுக் கொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக பாராளுமன்றப் பிரநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் இம் மாவட்டத்தில்  முஸ்லிம் மக்கள்  தொடர்ந்து அரசியல் பிரதிநித்துவமின்றி அவல நிலையிலேயே காணப்படுவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாபதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியினர் குறைந்தளவிலான வாக்குகளைப் பெற்றமையினால் இம்முறை பொதுத் தேர்தலில் ஒரு பாராளுமன்றப் பிரநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது சந்தேகம் என்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார்.

2015 புதிய அரசாங்கம்  பதவியேற்ற நாள் முதல் என்ன நடந்தது? முற்று முழுதாக நாடு பின் தள்ளப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினர் ஐக்கிய தேசியகட்சிக்கு முக்குக் கொடுத்து இருந்தார்கள். 

அவர்களுடைய ஆதரவு இருந்த போதிலும் ஜனாதிபதியின் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள்.  மக்கள் விடுதலை முன்னணியினர் செல்வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வாக்கு விகிதம் நூற்றுக்கு 3 விகிதமாகும். இந்தக் குறைந்த வாக்கு விகிதத்தை வைத்துக் கொண்டு பொதுத் தேர்தலுக்குச் செல்வார்களாயின் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநித்துவத்தைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாது. நூற்றுக்கு 5 விகிதம் கூட எந்த மாவட்டத்திலும் பெற்றுக் கொள்ள வில்லை. இதற்கான முக்கிய காரணம் என்ன? அவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு முக்குக்கொடுக்கப் போனதே முக்கிய காரணம். இவர்கள் போகும் பாதையை அவதானித்துக் கொண்டிருந்தேன். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை தேர்தலுக்கு முன்னரே அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். கட்சியின் தலைவரை விமர்சனம் செய்து கட்சி உருவாக்க முடியுமா? அவர்கள் சஜித் வேண்டும் என்றார்கள். இறுதியில் ரனில் சஜிதுக்கு கொடுத்தார். சஜித் வருவார் என்று கூறியவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது.

 சஜித் பற்றி நன்றாகத் தெரிந்வர் ஒருவர் இருப்பாராயின் நானும் ஒருவர். அவர் தந்தையுடன் நான் மிக நெருக்கமாக செயற்பட்டவன்.  

இந்நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு நம்புவது. தேர்தல் முன்னெடுப்புக்களை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில்  இல்லாமல் வேறு இடத்தில் இருந்து கொண்டு செயற்பட்மார்கள்;.  ஒரு சிலரை வைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிப்பதில் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அரசியலை ஒரு கலவர நிலைக்கு இட்டுச் செல்ல முடியாது. இந்தக் குழுக்கள் ஒன்று சேர்ந்து வேவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவுக்கு விமர்சனம்  செய்கிறார்கள். கூட்டம் ஒன்றை வைத்தால் சண்டை பிடித்துக் கொள்கிறார்கள். எப்படி ஒழுங்கு முறையின்றி கட்சியை நடத்திச் செல்வது? 

கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பற்றி முஸ்லிம்; தலைவர்கள் கூறிய அனைத்துப் பொய்யாகி முடிந்து விட்டது. 

மியமன்மராக மாறும். தாக்குதல் நடத்துவார்கள். அதேவேளை சஜித் பிரேமதாச வெற்றி பெற்று இருப்பராயின் முஸ்லிம் கிராமப் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு முஸ்லிம்களையும் விட்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாது. 

அவர்கள் பாதுகாப்பு கொடுக்க வில்லையே. ஐக்கிய தேசிய கட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான  பள்ளிகள், கடைகள், வீடுகளுக்கு தீ மூட்டும் போது, திகன கண்டிக் கலவரம்  நடந்த போது என்ன செய்தார்கள். அவர்கள் கூறியது எல்லோரும் மொட்டுக் கட்சிக்காரர்களே செய்தார்கள் என்று கூறினார்கள்.  

ஆட்சி செய்தது அவர்களேயாவர்.  அவர்கள் தான் பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள். பொலிஸ்,  படையினர்கள் எல்லோரும் அவர்கள் வசம் இருந்தது. மொட்டுக் கட்சிக்காரர்கள் தீ மூட்டிவிட்டுப் போகும் வரை அவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பார்களா? இந்தக் கதையைத் தான் சஜித்தின் வெற்றிக்காக அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்க்ள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி           

8 comments:

  1. Mr Muzammil, Kurunegala Muslims don't need you as our representative. If Mr Gothabaya appoints a suitable person for Kurunegala, we would definitely support him in the election.

    ReplyDelete
  2. Time ku oru kathai kathikum unmai Muslim ever

    ReplyDelete
  3. Dear Brother Muslim Voters of the Muslim vote bank.

    முஸ்லிம் Mp யை பெறாவிட்டால், முஸ்லிம்களை கௌரவப்படுத்தும் ஆளுநர் பதவியை இழக்க நேரிடும்

    The heading of the news item itself clearly tells the hidden intention of our great Muslim "MUNAFIQUE" poiticians. This guy is NOT asking the vote of the Muslims to send a aspiring young professional educated representative of the Muslim community of Kurunegala district to parliament but he is selling the idea that if he is not made an MP in the Kurunegala list, it is the Muslims who will loose the honour of HE. Gotabaya Rajapaksa appointing a Muslim as the Governor of the NWP after the general elections in March 2020. What a cunning Muslim politician he can be to do this. HE. Gotabaya Rajapaksa, PM Mahinda Rajapaksa and Hon. Basil Rajapaksa are honourable people/politicians. They will DEFINITELY appoint another good (NON-MUNAFIQUE) Muslim as the Governor of the NWP after the general elections if the need arises. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth in the NWP province. This has to emerge from among the Sri Lanka Muslim Community in the Kurunegala district to face the general election in March, Insha Allah. By doing so, such a Muslim candidate can poll in enough Muslim votes (much more than Muzzamil) to strengthen the vote count of the SLPP in Kurunegala that can give more MP's to the SLPP in the district to create the 2/3 majority that HE. Gotabaya Rajapaksa, PM Mahinda Rajapaksa and Hon. Basil Rajapaksa are asking the voters to give, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. What is the benefit to our society having a useless like you?

    ReplyDelete
  5. We don't need you..you are useless and only a deal master.pls retire or leave.president has the ability to appoint someone else.you not even laser OL.shame for uttering this nonsense stories.

    ReplyDelete
  6. உங்களை muzalla Colombo க்கு போட்டு பின்னர் Kurunegala போட்டு, election கேட்க waittu thottra பின் வீட்டுக்கு anuppuwarhal.... That's the master plan....

    ReplyDelete
  7. We no need u to Kurunegala, we enough qualified guys here to select for parliament

    ReplyDelete

Powered by Blogger.