Header Ads



Dr ஷாபி பற்றி வெளியான, தகவல் பொய்யானது - ரதன தேரர்

குருணாகல் மகப்பேற்று மருத்துவர் மொஹமட் ஷாபியை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு அரச சேவைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக சமூக வளைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பாதென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விடயம் குறித்து தாம் அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருடன் கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கடிதம் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என செயலாளர் கூறினார்.

சுகாதார சேவைக்குழுவில் அவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அதனை நிச்சயமாக அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பார்கள்.

சுகாதார சேவைக்குழுஇ குருணாகல் வைத்தியசாலை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட யாரும் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.

மருத்துவர் மொஹமட் ஷாபியை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. We never mind Madness Dog what he try to saying.

    ReplyDelete
  2. It’s a very piece of advice to Dr. Shafie. If you have no judicial case anymore, please retire from service, and go to Middle east or wherever you have prestige for you and your profession. These people won’t let you live or die.

    ReplyDelete

Powered by Blogger.