January 08, 2020

ஹஜ் என்ற போர்வையில், முஸ்லிம்களை வைத்து வியாபாரம் - கவனம் செலுத்த மஹிந்த உத்தரவு

நாம் நிர்ணயிக்கின்ற கட்டணத்தில் ஹஜ் கடமையை மேற்கொள்ள முகவர்கள் முன்வருவார்களாயின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹஜ் குழு தயாராகவுள்ளது. இல்லாவிடின் இருநாட்டு அரசாங்கங்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இக்கடமையை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஹஜ் குழுத்தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

அத்துடன்  ஹஜ் கடமை என்ற போர்வையில் முஸ்லிம்களை வைத்து வியாபாரம் செய்யும் முகவர்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தன்னை பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹஜ் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

5 கருத்துரைகள்:

Govt should fix a standard all inclusive flat rate and specify standards for food and lodging in order to stop this dayligt robbery

ALHAMDULILLAH. "The Muslim Voice" is happy that the Government is taking appropriate steps to help the deserving Muslim Umma in Sri Lanka to make their Holy Haj pilgrimage easy and affordable, Insha Allah. First they sent a team who were given instructions how to get things done in cooperation with the Sri Lanka Consulate in Jeddha. Them visas to only first time pilgrims and now this "ORDER", Insha Allah. "The Muslim Voice" had a "PASSION" to bring these changes to the Haj pilgrimage program in Sri Lanka and did what it can to make it happen through it's writtings/comments/rebuttals in the print and digital social media of Sri Lanka.
The next move should be,(Insha Allah) for the SLPP new government to negotiate and get back the "CEYLON HOUSE" which has been schemingly by acquired by a Saudi citizen and his family with the conaivence of some of our "Munaafique Muslim businessmen and Ulema". "The Muslim Voice" will continue to ask "DUA" from God AllMighty Allah and "LOBBY" for this to happen during HE. President Gotabaya Rajapaksa, PM Mahinda Rajapaksa and Basil Rajapaksa.
Noor Nizam - Convener "The Muslim Voice".

சிறந்த செயற்பாடு!
இதுவரை காலமும் ஈவு, இரக்கமின்ற மனிதாபிமானத்தைப் புதைத்து வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே ஏஜட்கள் செயற்பட்டன. எத்தனை இலட்சம்! முன்னரும் அரசாங்கம் ஒரு கட்டுப்பாட்டு விலையை வைத்ததுதான். ஆனால், ஏஜன்ட்கள் அதையும் மீறின. ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும் ஒன்றும் நடக்காது என்று. இப்போது நிலைமை மாறிவிட்டதென்பதை ஏஜன்ட்கள் நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள் என நினைக்கின்றேன். ஏழைகளின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
உம்ரா விடயத்திலும் இதுபோன்ற ஒரு கட்டுப்பாட்டை பிரதமர் அவர்கள் விதிக்க வேண்டும்.

(ஹச் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள்.) ஹஜ் கட்டணங்கள் குறைப்பதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற விடயம் சமூகத்தில் ஒரு பேசுபொருளாக இருந்து வருவதை நாம் அறிவோம்.அது சாத்தியப்படுவதற்கு முகவர்கள் ஊடாக அல்லாமல் நேரடியாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அச்சேவை கொண்டுவரப்பட வேண்டுமென்ற விடயமும் பலரால் சுட்டிக் காட்டப்படுகிறது.அவ்வாறான நிலை வந்தால் ஹச் கட்டணங்கள் குறைவதற்கான அதிக வாய்ப்பு இருப்பது உண்மையே. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதல் எனும் போது திணைக்களத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழேயே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு வந்தால் அப்பணிகளை இலகுபடுத்த திணைக்களம் சில வழிமுறைகளை கடைபிடிக்க முடியும்.அவை வருமாறு.ஒரு மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கி மார்க்க ரீதியான வழிகாட்டல் சேவைகளை பெறுவதற்கு தகுந்த உலமாக்களை பதிவு செய்தல்.2.பிரயாண வழிகாட்டிகளை ஒரு மாதகால சேவைக்கு தேர்ந்தெடுத்து சேவைக்கு அமர்த்துதல்.3.சமையல் வல்லுனர்களை குறித்த காலப்பகுதிக்கு சேவை வழங்க தேர்ந்தெடுத்தல். இவ்வாறாக முகவர்கள் வழங்கும் சேவையை தனிமனிதர்களாகவுள்ள துறைசார்ந்தவர்களிடம் குறித்த காலப்பகுதிக்கு கட்டணம் செலுத்தி பெறுகின்ற போது இச்சேவைகளுக்கு முகவர்களால் அவர்களோடு இணைந்துள்ள பல்வேறு நபர்களுக்கும் கூலி வழங்குவதற்கும் சேர்த்து அறவிடப்படுகின்ற தொகையிலிருந்து ஒரு பகுதியளவிலான தொகையினை குறைத்து அரசாங்கம் குறைந்த கட்டணத்தில் ஹச் சேவையினை வழங்க முடியும்.(ஏ.எம்.ஆரிப்)

மேற்குறித்த நிலை அமுல்படுத்தப்படுகின்ற போது முகவர்கள் பாதிக்கப்படுவார்களாக இருந்தால் இந்தியாவில் உள்ளது போன்று விரும்பியவர்கள் முகவர்கள் ஊடாகவும் ஏனையவர்கள் அரசாங்கத்தோடும் இணைந்து பயணிக்கலாம் என்ற இரு தெரிவுகளையும் அமுல்படுத்தலாம்.அப்போது பணத்தை கவனத்திலெடுக்காது வசதிகள் பெரிதாக இருக்க வேண்டுமென நினைக்கின்றவர்கள் முகவர்களோடு இணைந்து செல்ல முடியும்

Post a Comment