January 08, 2020

பொன்சேக்காவின் முஸ்லிம்களுக்கு எதிரான, கருத்து கண்டிக்கப்பட வேண்டும்


நாடு ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர் கொண்டுள்ள கால கட்டத்தில், புலனாய்வுத் துறையின் மேலதிகாரியாக பிரிகேடியர் சுரேஷ் ஸாலேஹ்வை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நியமித்தமை தவறு என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றமை கவலை தரும் விடயமாகும்.

தான் ஜனாதிபதியானால் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையே பாதுகாப்பிற்கு பொறுப்பாக நியமிப்பேன் என்று ஐக்கிய ஜனநயாக கூட்டமைப்பு வேட்பாளர் சஜித் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் கட்சிகளும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு அன்னம் சின்னத்தில் களத்தில் குதித்த போதும் தற்போதும் அதே ஐக்கிய தேசியக் கூட்டணியில் பங்காளிகளாக இருக்கின்ற யதார்த்தத்தை உணராமலே அல்லது அவர்களின் உணர்வுகளை மதிக்கமலேயே இவ்வாறான கருத்தினை அவர் முன்வைத்திருக்கிறார்.

ஒரு சிறிய குழுவின் தீவிரவாத அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும் பிரதிநிதிகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கச் செய்கின்ற கருத்து வெளியீட்டை அவர் மேற்கொண்டிருக்கின்றமை கண்டிக்கப் பட வேண்டிய விடயமாகும்!

அவர் சொல்லுகின்ற இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஒட்டு மொத்தத்த இலங்கை முஸ்லிம்களும் எதிரானவர்கள் என்கிற உண்மையை நாட்டு மக்கள் அறிவார்கள், முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்க்கத் தலைமைகளும் பொதுமக்களும் அதனை நிரூபித்துள்ளார்கள்.

மேற்படி உண்மையை அதிபர் கோதாபய ராஜபக்ஷ உணர்ந்து செயற்படுவதாகவே நாங்களும் நம்புகிறோம், அத்தகைய முதிர்ச்சியின் வெளிப்பாடாகவே புலனாய்வுத் துறை நிபுணத்துவமிக்க மேலதிகாரி பிரிகேடியர் சுரேஷ் ஸாலேஹ்வை இனமத வேறுபாடுகளைப் பார்க்காது அந்த துறைக்கு பொறுப்பாக நியமித்துள்ளார்.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனெரல் கமல் குணரத்னவும் உள்நாட்டு யுத்த வெற்றியிற்கு பங்களிப்புச் செய்த முஸ்லிம் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகளின் தேசப்பற்றுமிக்க சேவைகளை பாராட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Inamullah Masihudeen

6 கருத்துரைகள்:

Its very clear that why Rajapaksas put Sarath behind bars.
sarath Fonseka does not have brain.
I never support UNP and its affiliates.
Affiliates are:
Sarath Fonsaka
Champika Ranawakka
Other lean monk (I forgot his name) . He is always after Dr Shafee and Hisbullah
Mano Ganesh
They are all anti muslims.
We have put Sarath behind bars again.

For the kind information of unp supporters

பொன்சேகா அவர்களுக்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ரு பாராழுமன்ரம் போக இப்பொழுதே தனக்கு சிங்கள வாக்கு தேவைக்காக முஸ்லிம்களை சீண்ட ஆரம்பித்துல்லார்.

Nammavargal azuvum sari enbaargal..

UNP UDAN SHENDU NITKUM,
HAKEEM, RISHAD,MUJIBRAHMAN,
ASATH SALY,FOUZI, PONRA POIYARKAL
EMAATRUKARARKAL,THUVESHIKALUKUU,
SHARIYANA PAADAM KATPIKKAVENDUM.

முஸ்லிம்களே!
இதுக்குத்தான் சொல்ற ஹொந்த நே. UNP காலாகாலமாக முஸ்லிம்களை கருவறுத்தே வந்துள்ளது. இது விளங்காமல் தான் சாணாக்கியமும் சஞ்சலமும் ரனிலின் நரிப் புத்திக்குள் மாட்டிக் கொண்டுள்ளார்கள்.
போதாக்குறைக்கு கிழக்கு முஸ்லிம்களும் இரு தலைவர்களதும் மடைமைக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.
கிழக்கு முஸ்லிம்கள் அதாஉல்லாஹ்வின் கையைப் பலப்படுத்த உடன் களத்தில் இறங்கி வேலை செய்வது அவசியமாகும்.

Post a Comment