Header Ads



இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நாம் குழப்பமடைய மாட்டோம் - மனோ

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாசவின் தலைமையில் புதிய கூட்டணி ஒருவரை கட்டியெழுப்ப வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

இந்த குரல் பதிவுகள் தொடர்பில் நாம் குழப்பமடைய மாட்டோம். அது தவறு. நேர்மையற்ற செயல். சாதாரணமாக நானும் நீங்களும் தொலைப்பேசியில் உரையாடினால் அந்த உரையாடலை பதிவு செய்வது தவறாகும். அது சட்டவிரோத செயல். அதனை செய்ய முடியாது. மேலும், இதன் மூலம் வௌியாகியுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும். 

எமது அரசாங்கத்தில் நான் அமைச்சரவை அமைச்சராகும். நான் எனது கடமைகளை சரியாக செய்தேன். இந்த செயல் காரணமாக தற்போது நாமும் துன்பப்படுகிறோம். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் யார் என்று நாங்கள் கூற மாட்டோம். அது தொடர்பில் அவர்கள் தீர்மானம் எடுப்பார்கள். எனினும் அந்த கட்சியுடன் இணைந்து நாம் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளோம். அந்த கூட்டணியின் தலைவராக நிச்சயமாக சஜித் நியமிக்கப்பட வேண்டும். 

இன்றைய நிலையில், பிரபலமான தலைவர் அவர்தான் வேறு யாரும் இல்லை. அது நடந்தே ஆக வேண்டும். எதிர்வரும் தேர்தலில் நாம் அவரைதான் முன்னிறுத்தவுள்ளோம். 16 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் இந்த நாட்டுக்கு கிடைக்கும் என தெரிவித்தார். 

2 comments:

  1. Mano garden's is an excellent person to work in the tea plantation,

    ReplyDelete
  2. MANO GANEASN EXCELLENT PERSON TO WORK IN TEA ESTATE AS GOOD AS THOUSANDS OF SRILANAKN MUSLIM GIRLS WASHING TOILETS IN MIDDLE EAST COUNTRIES.

    ReplyDelete

Powered by Blogger.