Header Ads



இலங்கையின் சனத்தொகை, கணக்கிடும் பணி

இலங்கையின் சனத்தொகை மற்றும் வீடுகளை கணக்கிடும் பணிகள் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர் மஹிந்த ராஜபக்ச விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன் கீழ் சனத்தொகை மற்றும் வீடுகளை கணக்கிடும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படுகின்றது.

இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கள அதிகாரி ஒருவர், சனத்தொகை மற்றும் வீடுகள் தொடர்பான 15ஆவது கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வரைபட நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவுப்படுத்தப்பட்டுள்ளன. கிராமசேவகர் மட்டத்தில் அவை செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே சனத்தொகை மற்றும் வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி சனத்தொகை 20,359,439 பேர், வீடுகளின் தொகை 5,267,159 என்று கணக்கிடப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.