Header Ads



அமெரிக்க அதிபர்களுக்கு செல்வாக்கு குறைந்தால், முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவார்கள்


டிரம்பிற்கு செல்வாக்கு குறைந்து கொண்டே வந்தது அதோடு ஆயுத வியாபாரம் மிகவும் டல்லாக இருந்தது பொறுத்து பொறுத்து பார்த்தார் சரியான சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமென்று பாக்தாதில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடன் சேர்த்து முக்கியமான ராணுவ அதிகாரிகளையும் மொத்தம் 13 பேரை ஏவுகணைத் தாக்குதல் மூலமாக அமெரிக்கா கொன்றது.

இதன் மூலமாக ஈரான் கடுமையான கோபத்தில் இருக்கிறது ரஷ்யா சீனா வின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றது ஆதரவு கிடைத்து விட்டால் எந்த நேரம் வேண்டுமானாலும் அமெரிக்கா ஈரான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதில் நேரடியாக பாதிக்கப்படப்போவது அமெரிக்கா அல்ல சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகள் தான் குறிப்பாக சவுதியில் அமெரிக்கா தளம் அமைத்து இருப்பதால் சவுதி தாக்கப்படலாம் இதன்மூலமாக சவுதியும் சவுதியின் ஆதரவு நாடுகள் அமெரிக்காவிடமிருந்து இன்னும் ஆயுதங்களை வாங்கி குவிக்கும்.

ஒரு பக்கம் அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் உச்சத்தை அடையும் மறுபக்கம் ஈரானை பழிதீர்த்தது போலவும் இருக்கும் என அமெரிக்கா கணக்கிடுகிறது.

சென்னையில் ஒரு வார்த்தை சொல்வார்கள் எச்சிலை துப்பி சண்டைக்கு இழுக்கின்றான் என்று அதைத்தான் தற்போது ஈரானிடம் அமெரிக்கா செய்து வருகின்றது.

அமெரிக்க அதிபர்களுக்கு செல்வாக்கு குறைந்தால் முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவார்கள் அதேபோன்று இந்திய பிரதமருக்கு செல்வாக்கு குறைந்தால் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவார்கள் இதுதான் காலகாலமாக நடந்து வருகின்றது.

 Mylai Kamarudeen

No comments

Powered by Blogger.