Header Ads



'சுமனரத்ன தேரர் வம்புக்கு செல்பவர், போலி கத்தோலிக்க அருட் தந்தையா...'


கடந்த மாதம் அம்பிட்டியே சுமனரத்ன தேரரின் அடாவடித்தனங்கள் அடங்கிய பல வீடியோக்கள் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

ஒரு கத்தோலிக்க பாதிரியார் மீது அந்த பௌத்த பிக்கு இனவாதத்தை கக்கும் விதமான காட்சிகளை உள்ளடக்கி சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்த அந்த வீடியோக்கள் தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருந்தன.

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இனவாத கருத்துக்களுக்கும், மதவாத அடாவடித்தனங்களுக்கும், சட்ட மீறல்களுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றவர்.  காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது அடாவடித்தனங்கள் கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், குறிப்பிட்ட அந்த வீடியோக்களில் காணப்படுகின்ற பாதிரியார் தொடர்பாக வெடித்துள்ள சர்ச்சைதான் தற்பொழுது பொதுப்பரப்பில் அதிகம் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

வீடியோக்களிள் காணப்படுகின்ற அந்த பாதிரியாரை 'கத்தோலிக்க பாதர்' (அருட் தந்தை) என்றுதான் அந்த தேர் அழைக்கின்றார்.

அந்த பாதிரியாரும் கத்தோலிக்க அருட் தந்தைகள் அணியும் நீண்ட வெண்நிற அங்கி மற்றும் கறுப்பு நிற இடுப்பு பட்டி அணிந்தே காணப்படுகின்றார்.

இத்தனைக்கும் அவர் ஒரு கத்தோலிக்க அருட்தந்தையே அல்ல என்பது மட்டுமல்ல அவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரே கிடையாது என்று கூறுகின்றது இலங்கை கத்தோலிக்க திருச்சபை.

இந்த நபர் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கத்தோலிக்க திருட்சபையின் ஊடக இணைப்பாளர் அருட் தந்தை ஜுட் கிரிஷாந்த, இவர் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் அல்லவென்றும், இவர் திருமணமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமண பந்தத்தில் தங்களை இணைத்துக்கொள்ளாத, கிறிஸ்தவ ஊழியத்திற்கு என்று தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் மாத்திரமே இதுபோன்ற நீண்ட வெள்ளை அங்கியும்(Cassock), கறுப்பு நிற இடுப்புப் பட்டியும் அணிவதற்கு கத்தோலிக்க திருச்சபை அணுமதி வழங்கியுள்ளதாகத் தேரிவித்துள்ள அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த , கத்தோலிக்க திருட்சபையைச் சேர்ந்தவர்கள் மதம் மாற்றும் காரியங்களில் ஈடுபடுவது கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

(அருட்தந்தை ஜுட் கிரிஷாந்தவின் முழுமையான அறிக்கையை, இணைக்கப்பட்டுள்ள காணொளியின் இறுதிப் பகுதியில் காணலாம்)

காணொளிகளில் பாதிரியார் அணியும் ஆடையில் காணப்படும் நபரின் பெயர் நாளக்க பொன்சேகா. சில வருடங்களுக்கு முன்பு இலங்கை மெதடிஸ்த திருச்சபையில் ஒரு சுவிசேசகராக கடமையாற்றிய இவர், ஒழுக்கமீறல்கள் காரணமாக மெதடிஸ்த திருச்சபையில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். தட்பொழுது சுயாதீனமாக கிறிஸ்தவ ஊழியங்கள் செய்து வருகிறார்.

நாளக்க பொன்சேகா ஒரு போதகராக கடமையாற்றுவதற்கான அனுமதியை தாம் வழங்கவில்லை என்று கூறுகின்றார் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் பிஷப் ( President Bishop) Rev. அசிரி பெரேரா.

வீடியோவில் காணப்படும் நாளக்க பொன்சேகா என்ற நபரின் உடல் மொழியையும், சட்ட மீறலையும், இறுமாப்பு தோறனையையும், அவரது செயலையும் வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை மெதடிஸ்த திருச்சபை, 'கிறிஸ்தவத்தை பிரதிபலிக்காத நடவடிக்கை' என்று சாடி காரசாரமான ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. ibc tamil

1 comment:

Powered by Blogger.