இதை பற்றி பேசாமல் நீங்கள் அமைதி காத்தால், இனப்படுகொலையை நீங்கள் ஆதரிப்பதாக அர்த்தம்
யார் நீங்கள்..? கடந்த மூன்று நாட்களில் 200-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இதை பற்றி பேசாமல் நீங்கள் அமைதி காத்தால், இனப்படுகொலையை நீங்கள் ஆதரிப்பதாக அர்த்தம். கொலை செய்பவர்களை விட கேவலமானவர்கள் நீங்கள்.
கொலைகாரர்களேனும் பேராசைக்கோ, ஏதோவொரு காரணத்துக்கோ கொலை செய்வதை ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் நீங்களோ ஒப்புக் கொள்வதில்லை. இப்பூவுலகில் மோசமான மனிதர் நீங்கள். உங்களின் கேவலமான நடத்தைக்கு வரலாறு நியாயம் தீர்க்கும்! ஹாலிவுட் நடிகர் ஜான் கசாக்!

Post a Comment