January 25, 2020

ஜனாதிபதியாக கோத்தாபய வந்தபிறகு, முஸ்லிம்களுக்கு ஏதாவது அநீதி நடந்ததா..? அலிசப்ரி கேள்வி

நம் முஸ்லிம்கள் தோ்தல் காலத்தில் சொன்னாங்க கோட்டாபாய ஜனாதிபதியாக வந்தால் இந்த நாட்டில் முஸ்லிம்கள் இனி இருக்க முடிாயது ”அம்பான அடி” விழும் என்றும் சொன்னாா்கள். தற்பொழுது அவா் ஜனாதிபதியாக வந்த பிறகு ஏதாவது அநீதிகள் உங்களுக்கு நடந்துள்ளாதா ,? , நாம் வழமைபோன்று நிம்மதியாகத்தானே இன்றும் வாழ்கின்றோம். எனக் கேள்வி எழுப்பினாா் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் சட்ட ஆலோசகருமான அலி சப்ரி.

 நேற்று (24) மருதானை அல்சபா மண்டபத்தில் என்.எம். அமீன், மௌலவி தாசீம் அவா்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நவமணிப் பத்திரிகையின் ரமளான் பரிசு மழை போட்டியில் வெற்றியீட்டியவா்களுக்கு பரிசலிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா். 

அவா் மேலும் அங்கு உரைாயாற்றுகையில் - 

மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதியரசா்கள் தலைவராக நிந்தவுரைச் சோ்ந்த திலீப் நவாஸ் ஜனாதிபதியினாலும் நீதிச் சேவை ஆணைக்குழுவினாலும் நியமிக்கப்பட்டுள்ளாா். இனியும் நமக்குள் இனரீதியாக அரசியல் கட்சிகள் வேண்டாம். நாமும் இணைந்து செயல்படுவோம். 

நாமே கடந்த 30 வருடத்திற்குள் விலகிச் சென்று விட்டோம். முஸ்லிம் பாடசாலை ,தமிழ் பாடசாலை, கிரிஸ்த்துவ பாடசாலை என பிரிந்தோம். நாம் அணியும் உடைகளையும் கருப்பு அபாய என அணிகின்றோம். பள்ளிவாசலுக்குள் சுன்னத்து ஜமஆத், தப்லிக் ஜமஆத் என பிரிந்து பள்ளிக்குள் சன்டைப்பிடித்து ஒவ்வொரு ிம்ஆத்துக்கும் தனித்தனி பள்ளி நிர்மாணித்துக் கொண்டோம்.

அந்த வகையில் சகரானும் தனியே பள்ளிவாசல் நிர்மாணித்துக் கொண்டு அவா் உயிா்த்த ஞயிறு தினத்தில் குண்டுகளுடன் ஏனையவா்களுடன் மாய்த்துக் கொண்டாா். இதனால் அப்பாவி முஸ்லிம்கள் 2225 பேர் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு சிறையில் வாடுகின்றனா். 

இவா்களை மீண்டெடுப்பதற்காக நான் ஒரு செயலகத்தை அமைத்து சில முஸ்லிம் சட்டத்தரணிகளுடன் இணைந்து அதற்கு 3 மில்லியன் பணம் தேவைப்பட்டது. ஒரு முஸ்லிம் முதலாலி 6 இலட்சம் ஆரம்பிப்பதற்காக தந்தாா். அப்பணத்தை வைத்துக் கொண்டு அந்த செயலகத்தை ஆரம்பித்தோம். 

இந்த அப்பாவிகளது சகல தஜ்தாவேஜூகளையும் சேகரித்து அவா்களை விடுவிப்பதலில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் ஒரு சிலா் செய்யும் தவறுகளுக்கு ஏனையோரும் பாதிக்கப்பட்டனா். 

ஆகவே தாம் நாம் மற்றவருக்கு நமது மதத்தினை கற்பிக்க முன்பு நாம் ஒன்றுபட்டு ஒரு கொடியின் கீழ் வரல் வேண்டும். சில முஸ்லிம் தலைவா்கள் காலத்துக்கு காலம் தோ்தல்களில் மட்டும் அவா்களது சுயலாபத்திற்காக முஸ்லிம்களை பாவித்துவிட்டு அந்த மக்களை நடு ஆற்றில் விட்டுவிடுகின்றாா்கள் இந் நிலை மாறல் வேண்டும். முஸ்லிம்கள் தனி கட்சி, இருந்தால் தமிழா்களும் தனிகட்சி ஆரம்பிப்பாா்கள் அதே போன்று தான் பௌத்தா்களும் இனரீதியாக கட்சி ஆரம்பித்தாா்கள். என அங்கு அலி சபறி உரையாற்றினாா்.

Ashraff A Samad

12 கருத்துரைகள்:

அலி சப்ரி அவர்களே நீங்கள் திறமையானவர். இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பலர் உங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் தயவுசெய்து முஸ்லிம் கட்சிகளை அழிக்கும் பிரச்சாரங்களை மேற்றக்கொள்ள வேண்டாம் முஸ்லிம் காட்சிகள் வேண்டுமா வேண்டாமா என்பதை முஸ்லிம் சமுதாயம் தான் முடிவு செய்ய வேண்டும். தேசிய கட்சிகளில் இருக்கும் உங்களைப்போன்ற நபர்கள் செயற்பாடு ரீதியாக முஸ்லிம்களின் ஆதரவை பெற முயற்சி செய்யுங்கள் முஸ்லிம்கள் ஒன்றும் தமிழர்களை போல் தேசிய கட்சிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுடைய பாதுகாப்பிற்கும் உரிமைகளுக்கும் எந்த பங்கமும் வராதவரையில் தேசிய கட்சிகளை தாராளமாக ஏற்றுக்கொள்வோம்

முஸ்லிம்களின் சிறந்த எதிர்காலத்திற்கு முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் தேவை இல்லை என்று மக்கள் தீர்மானம் எடுத்துவிட்டார்கள். உரிமை என்ற நிலைமாறி ஒருசிலரது சுகபோக ,சலுகைகள் சார்ந்த அரசியல் என்ற தப்பான தளத்தில் எப்போது தடம் புரண்டதோ அன்றிலிருந்து மக்களும் இக் கட்சிகளை விட்டும் தூரமாகத் தொடங்கி விட்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் தேசியக் கட்சிசார் முஸ்லிம் தலைவர்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் களம் காணுவது அவசியமாகும்.

திரு அலி சபிரி அவர்களே, முலீம்களுக்கான தனி காட்சிகள் இருக்கும்வரைதான் உங்களை போன்றோருக்கு தேசிய இனவாத காட்சிகளில் இடமும் மரியாதையும் !

புள்ளைய கிள்ளி விட்டு தெட்டல ஆட்டன கத

முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அதை பாதுகாப்பதால் இனவாதிகளாக ஆகமாட்டார்கள் அவர்கள் பெருபான்மை பௌத்தமக்களுடன் சேர்ந்துதான் வாழ்கின்றார்கள் அது போன்றே கிறிஸ்தவ,இந்து,பௌத்த, மக்களை மதித்து அவர்களுட்ன் அன்பான முறையில் வாழவேண்டும் என்றுதான் இஸ்லாமிய மார்கம் சொல்கின்றது

முஸ்லிம்கள் ஒற்றுமை பட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தினால் அந்த ஒற்றுமையால் அராசாங்க அமைப்பால் மக்களுக்கு கிடைக்கும் சுமார் 90℅ உருமைகளை முஸ்லிம்களுக்குறிய பங்கை பெற்றுக்கொள்ளலாம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சிதரடிக்கப்பட்டு முஸ்லிம்கள் தேசிய கட்களுக்கு வாக்களித்து அவர்களிடம் எங்கள் உருமைகளை தாருங்கள் என்று கேட்டால் 15℅ விகிதமான முஸ்லிம்களின் உருமைகளை அதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்

இந்த விடயத்தை வழக்கறிஞார் அலி சப்ரி புரிந்துகொண்டால் முஸ்லிம்களுக்கும் அவருக்கும் நல்லது

நட்புடன் , முஸ்லிம்களை காட்டிக் கொடுக்காமல் தமிழரும். தமிழரைக் காட்டிக் கொடுக்காமல் முஸ்லிம்களும் தங்கள் உரிமைகளை வெல்ல முடியும். அப்படி மட்டும்தான் தமிழரோ முஸ்லிம்களோ வெற்றிபெற முடியும்

Sri Lanka Muslims should begin to have a new Political Vision and political Leadership, but Attorney-at-Law Ali Sabry joining the "PLOITICAL MUNAFQUIES" will lead to us falling deeper into the political pit we are already fallen into, because the Muslim Vote Bank does Not want the new political ledership to to do anything with that group. The presence of characters in the background show that the "POLITICAL MUNAQIQUES" are now trying to come back showing/assuring the Muslim Vote Bank to the aspiring new Muslim Political Leadership by arranging the gatherings the way they were doing to hoodwink the humble Muslim Voters for the "Yahapalana government, the SLMC and the ACMC.
Noor Nizam - Convener "The Muslim Voice".

See what MP Rishad Bathiudeen is tell:
இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்" என்று முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு வரும் என்றும், மியான்மரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டமை போன்ற மோசமான நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படும் என்றும் கூறினேன்.

அதன் ஆரம்பம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் இஸ்லாமியர்களுக்கென இருக்கும் சட்டங்களை இல்லாமலாக்கி, எல்லோருக்கும் பொதுவானதொரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிற பிரேரணையொன்றினை அவர்களின் அணியிலுள்ள அத்துரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கிறார்.

இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்ளையும் இல்லாதொழிக்க இப்போது முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்.

அதேபோன்றுதான், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு மாவட்டத்தில் ஒரு கட்சி அல்லது சுயேட்சை அணி பெற வேண்டிய வாக்குளின் வெட்டுப் புள்ளியை 05 வீதத்திலிருந்து 12.5 வீதமாக மாற்றுவதற்கான பிரேரணையொன்றினை, அவர்களின் அணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ முன்வைத்திருக்கிறார்.

மேலும், சிறுபான்மையினத்தவர்களின் அரசியல் கட்சிகள் ஆபத்தானவை என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார். இவையெல்லாம் இந்த நாட்டுக்கு விடிவைப் பெற்றுத்தரும் என்று எமக்குத் தோன்றவில்லை.

இந்த நிலையில், அவர்கள் குறித்து எமக்கு ஏற்பட்ட அச்சம், எம்மை விட்டும் விலகவில்லை.

'மைனாரிட்டி' அரசாங்கத்தை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் நடக்கின்றவர்கள், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறுவார்களாயின், சிறுபான்மை சமூகங்களுக்கு அவர்களால் முடிந்த அத்தனை அநியாயங்களையும் செய்வார்கள்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_838.html

Awanin naattaminri anu koooda asayyaathu
.....
Muslimkal myslimkalaaha waalnthaal nichayam.awarhaluku allahwin thunay enrum undu.....
Pira samooham enpathu naam arawanaykkum samooham antha wahayil em maarkkatthil ettratthaalwu enpathu illay ....
Thawaraaha purinthawarhal thawaraahawe selwaarhal...

HE IS SHORT MEMORY LOST PERSON

Can some body list down..any damage to Muslims after the date he claims? Then Ali S can keep little silent ?

Post a comment