January 17, 2020

கருணா ஒரு பயங்கரவாதத் தலைவன், ஒட்டுமொத்த மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்!

 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மாத்திரமே தேசிய தலைவர் என கருணா தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஹெல பொது சவிய அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் புதுகல ஜீனவங்ச தேரர் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஊடகத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதித் தலைவருமான கருணா கூறிவருகின்றார் எனவும் பிரபாகரன் என்பவர் முப்பது ஆண்டுகள் இலங்கை யுத்தம் ஒன்றை நடத்தி நாட்டு மக்களின் உயிர்களையும் தேசிய வளங்களையும் பெருமளவில் அழித்த நபர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களையும் மரண அச்சத்திற்குள் தள்ளினார். அது மட்டுமன்றி இலங்கையில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட புத்திசாலியான லக்ஷ்மன் கதிர்காமர், முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸாநாயக்க, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொன்ற நபர் எப்படி இலங்கையின் தேசிய தலைவராக இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் கருணா போன்ற பயங்கரவாத தலைவர்கள் முதலில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையாக வீழ்ச்சியடைய விடுதலைப்புலிகளின் அழுத்தங்களே காரணம். தமிழ் இனவாத நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர் புதிய நூற்றாண்டுக்கும் கொண்டு வந்து, மீண்டும் பின்நோக்கி இழுத்து சென்று தமிழ் மக்களையும், நாட்டையும் அழிப்பது தொடர்பில் கருணா உட்பட உயிருடன் இருக்கும் பயங்கரவாத தலைவர்கள் தமது மக்களிடம் மட்டுமல்ல முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகி வருகிறார்கள், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க இடமளிக்கின்றனர் போன்ற மூடத்தனமான கருத்துக்களை பரப்பியே தற்போது அரசாங்கம் 69 லட்சம் வாக்குகளை பெற்றுக் கொண்டது. எனினும் தற்போது கடந்த அரசாங்கங்களின் காலத்தை விட சிறப்பாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அவை மக்களுக்கு மூடி மறைக்கப்பட்டது. இப்படியான நிலைமையில் பிக்குமார், தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொள்ளும் சிறிய குழுக்கள் தற்போது ஊமையாக இருப்பது ஏன்? கிழக்கு மாகாண பிரதிநிதியான கருணா இப்படியான கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றனரா?

தற்போதைய அரசாங்கம் பிரபாகரனை தேசிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதா? என்பதை முழு நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் புதுகல ஜீனவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

6 கருத்துரைகள்:

சிங்களவர்களிடம் வாலையும் தமிழர்களிடம் தலையையும் காட்டும்
தமிழ் பயங்கரவாதியான கருணா நாயை நடு வீதியில் வைத்து இராணுவம் சுட்டு கொலை செய்ய வேண்டும்

பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டானோ அவ்வாறே கருனாவையும் நடு வீதியி்ல் சுட்டுக்கொல்ல வேண்டும்.

Ajan pontra paasisa thiviravathiyai kanom 😂

உண்மை இப்போதாவது புரிந்திரிக்கிரது

Welsaid honorable sadhu salute for u

தமிழர்களில் பாசிஸ்டுகள் தவிர்த்து மற்ற அனைவரும் புறந்தள்ளி வைத்திருக்கும் தமிழினத் துரோகிதான் கருணா அம்மான். அதற்கும் அப்பால் தேசத் துரோகியும் ஆவார்,
ஆனாலும் இப் பாம்பினை பாலூட்டி வளர்ப்பதை அரசியல், நட்பு, தனிப்பட்ட நலன் என்பவற்றுக்கு அப்பால் கைவிட வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு இலங்கையரதும் கடமையாகும்.
சுகபோகங்களுக்காக தன் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து கருவறுத்தவனுக்கு சிங்கள,முஸ்லிம் மக்கள் ஒரு பொருட்டே அல்ல.
எனவே தேரர் அவர்களது கருத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து கோட்டில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

Post a comment