Header Ads



சங்கபரிவார கும்பலுக்கு, நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன்


தலைநகர் டெல்லி ஷாஹின் Bபாக் இல் குடியுரிமை திருத்த சட்டம், NRC,NPR க்கு எதிராக கடந்த 30 நாட்களுக்கு மேலாக கடும் குளிரிலும் இரவு பகலாக போராடி வரும் சகோதரிகளை தினம் 500 ரூபாய்க்காக போராடி வருகிறார்கள் என்று சங்கிகள் கொச்சை படுத்தி வருகின்றனர்.

சங்கபரிவார கும்பலுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். 500 ரூபாய் அல்ல, 500 கோடிகள் அல்ல, எங்களது ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் வைத்தாலும் இந்த மக்கள் விரோத, அரசியலமைப்பு விரோத சட்டங்கள் திரும்ப பெரும் வரை ஒருபோதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

இந்த சட்டத்தின் மூலம் இந்திய தேசத்தில் ஒரே ஒரு நல்ல விசயம் நடந்துள்ளது என்று மட்டும் கூறலாம். என்னெவெனில் பல்வேறு கட்சிகளாகவும், ஹிந்து, முஸ்லிம் என்றும் பிரிந்து கிடந்த இந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாங்கள் இந்தியர்கள் எங்கள் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை என களத்திற்கு வந்துள்ளோம்.

மோடி, அமித் ஷா க்களே இனிமேல் பயம் காட்டும் அரசியல் இந்த தேசத்தில் எடுபடாது. இந்த தேசத்தில் பிறந்தோம், இங்கேயே வாழ்ந்தோம், இங்கேயே வாழ்ந்து மரிக்கவும் செய்வோம். சங்கபரிவார கும்பல் வீழ்த்தப்படுவார்கள்.

JAIHIND
லுப்னா சிராஜ் 
தேசிய துணை தலைவர்
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்

கர்நாடகாவில் அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் முன்னால் முதலமைச்சர் உள்ளிட்ட இலட்ச்சக்கணக்கான மக்கள் பங்கு பெற்றுள்ள மாநாட்டில் பேசிய உரையில் சில வரிகள்.

1 comment:

  1. "இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்;

    அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்;

    இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை;

    இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்;

    அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்.

    இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது);

    இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்;

    இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள்

    எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்

    இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள்,

    அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள்,

    அவன்தான் உங்கள் பாதுகாவலன்;

    இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்;

    இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்,

    இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்."

    (அல்குர்ஆன் : 22:78)

    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.