Header Ads



அடிப்படைவாதிகளின் முறைப்பாட்டினால், எனது பேஸ்புக் முடக்கம் - புலம்பும் ரதன தேரர்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் சட்­ட­மூ­ல­மொன்றை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் நேற்று -08- பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தார். 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மா­கவே இது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­ட­மூ­லங்­களை முன்­வைத்த அத்­து­ர­லியே ரதன தேரர் கூறு­கையில், 

முஸ்­லிம்­களின் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் தொடர்பில் காதி நீதி­மன்­றங்­க­ளினால் இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பிலும் அடிப்படைவாதிகளினால் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளினால் எனது சமூக வலைத்­த­ளங்கள் முடக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் இச்சபையின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன் என்றார்.-

1 comment:

  1. அடிப்படைவாதிகளோ யாரோ முறைப்பாடு செய்தால் முடக்குவதற்கு உலகத்தைச் சுண்டு விரலில் வைத்திருக்கும் பேஸ்புக் நிருவாகம் அறிவில் குறைந்தவர்களா? "அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"

    ReplyDelete

Powered by Blogger.