Header Ads



முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துங்கள்,, நீக்காதீர்கள்...!

இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான சட்­டங்கள் இருக்கக் கூடாது. நாட்டு மக்கள் அனை­வரும் பொது­வான சட்­டத்தின் மூலமே ஆளப்­பட வேண்டும் என இன­வாத பெளத்த குரு­மார்­க­ளினால் நீண்ட கால­மாக குர­லெ­ழுப்­பப்­பட்டு வந்­துள்­ளது.

இந்தக் கோரிக்கை தற்­போது உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இதன் ஆரம்­ப­மாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் பிரே­ரணை ஒன்­றினை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ளார்.

1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் பிரே­ர­ணை­யா­கவே இது சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­ர­லியே ரதன தேரர் 1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விவாக (பொது) கட்­டளைச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான பிரே­ர­ணை­யொன்­றி­னையும் சமர்ப்­பித்­துள்ளார். இச்­சட்­டத்தின் முக­வு­ரையில் காணப்­படும் ‘முஸ்­லிம்­களின் திரு­மணம் தவிர்ந்த’ என்ற வசனம் நீக்­கப்­பட வேண்­டு­மெ­ன பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் முஸ்­லிம்கள் பல நூற்­றாண்டு கால­மாக முஸ்லிம் தனியார் சட்­டத்தின் மூலமே ஆளப்­பட்டு வரு­கி­றார்கள். எமது நாட்டில் இன­வாத அமைப்­பு­களும் பெளத்த குரு­மாரும் தலை­யெ­டுத்­ததன் பின்பே முஸ்லிம் தனியார் சட்டம் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

முஸ்லிம் சமூகம் ஒரு தசாப்த கால­மாக ஆராய்ந்து முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­துள்­ளது. அத்­தி­ருத்­தங்­களை கடந்த ஆட்­சியில் அமைச்­ச­ர­வையும் அங்­கீ­க­ரித்­துள்­ளது. அத்­தி­ருத்­தங்கள் சட்­ட­வ­ரைஞர் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு காத்­தி­ருக்­கையில் அச்­சட்­டத்தை முழு­மை­யாக நீக்கி விட­வேண்டும் என்ற கோரிக்­கையை ஒரு போதும் அனு­ம­திக்க முடி­யாது. இது நாட்டில் இன நல்­லி­ணக்­கத்­துக்கு விழுந்­துள்ள பாரிய அடி­யாகும்.

அத்­து­ர­லியே ரதன தேரரின் தனி­நபர் பிரே­ரணை அடிப்­படை மனித உரிமை மீற­லாகும். உயர் நீதி­மன்றில் இதற்­கான அடிப்­படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அத்­து­ர­லியே ரதன தேரரின் தனி­நபர் பிரே­ர­ணையை தற்­போது அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் எதிர்த்­துள்­ளனர். ‘‘இது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் கொள்கைப் பிர­க­ட­னத்­துக்கு முர­ணா­னது. இப்­பி­ரே­ரணை மீளப்­பெ­றப்­பட வேண்டும்‘‘ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா தெரி­வித்­துள்ளார்.

பிரே­ரணை விவா­தத்­துக்கு வந்தால் பல்­லினச் சூழலை ஆத­ரிக்கும் அனைத்து கட்­சி­களும் சேர்ந்து பிரே­ர­ணையைத் தோற்­க­டிக்க வேண்டும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

‘ரதன தேரரின் தனி­நபர் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை. அது தோல்­வி­யி­லேயே முடியும்’ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காதர் மஸ்தான் தெரி­வித்­துள்ளார். அர­சாங்க தரப்பில் இப்­பி­ரே­ர­ணைக்கு ஆத­ரவு கிடைக்­காது எனவும் அவர் கூறி­யுள்ளார்.

‘ரதன தேரர் இன­மு­று­கலை உரு­வாக்க முயற்­சிக்­கிறார். அவ­ரது பிரே­ரணை இந்­நாட்டில் முஸ்லிம் சமூகம் வாழ முடி­யாது என்ற செய்­தியை கூறு­வது போன்­றுள்­ளது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இந்த இன­வாத நட­வ­டிக்­கையைத் தடுக்க வேண்டும்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.எம்.எம் ஹரீஸ் தெரி­வித்­துள்ளார்.

ரதன தேரரின் தனி­நபர் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு வந்தால் நாட்டில் அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் விரும்பும் மக்கள் பிர­தி­நி­திகள் பிரே­ர­ணையைத் தோற்­க­டித்து இன­வா­தி­களை ஓரம் கட்ட வேண்டும்.

‘முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்றில் தனி­நபர் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு பாதிப்­பில்­லாத வகையில் தீர்வு காணப்­படும்’ என நீதி சட்ட மறு­சீ­ர­மைப்பு மனித உரி­மைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

சட்ட திருத்த சிபா­ரிசு குழுவின் திருத்­தங்­களும் பாதிப்­பற்ற வகையில் நிறை­வேற்­றப்­படும் எனவும் கூறி­யுள்ளார். அமைச்­சரின் உறுதி மொழிகள் முஸ்லிம் சமூகத்தை ஆறுதல் படுத்தியுள்ளன.

முஸ்லிம் சமூகம் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை எதிர்பார்த்திருக்கின்றதேயன்றி அதனை முற்றாக நீக்குவதற்கு ஒருபோதும் உடன்படப் போவதில்லை. அரசியல் களத்தில் முஸ்லிம்களின் ஆதரவைக் கோரும் ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கமும், அவர்களுடன் இணைந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.-Vidivelli

6 comments:

  1. முஸ்லிம்கள் விவாகச் சட்டங்கள் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளிலும் விவாதங்களும் திருத்தங்களும் இடம் பெறுகின்றன. இவை பற்றிய விவாதங்கள் அவசியம்.முஸ்லிம் விவாகச் சட்டங்கள் தொடர்பாக பெண்ணிய அமைப்புகள் மற்றும் முஸ்லிம் பெண்கள் தரப்பு விவாதங்கள் மட்டும் ஓரளவு முன்வைக்கபட்டுள்ளது. ஏன் சிங்களவர் தமிழர் (குறிப்பாக கிழக்கு தமிழர்) மலையக தமிழர் மத்தியில் முஸ்லிம் விவாக சட்டங்களுக்கு எதிர்புள்ளது என்பதை இதுவரை யாரும் ஆராய்ந்ததில்லை. இது முஸ்லிம் பல்கலைக்களக சமூகத்தின் பணி. ஏனெனில் இதன் மூலம்தான் ஏனைய இனங்க்களோடு ஆக்கபூர்வமான விவாதங்களை முஸ்லிம்கள் ஆரம்பிக்க முடியும். இதுபற்றி நான் சிங்களவர்களோடும் தமிழர் மலையக தமிழர்களோடும் விவாதிதிருக்கிறேன். என் விவாதங்கள் மேற்படி இனங்கள் மத்தியில் நிலவும் முக்கியமான எதிர்ப்பு கோபம் முஸ்லிம் விவாக சட்டத்தின் அடிபடையில் கலப்பு திருமணங்கள் இடம்பெறுவது பற்றியதாகும். மட்டகளப்பு சிறுவயது மாணவி கலப்புத் திருமணத்தினூடாக மூழைச் சலவை செய்யபட்டு தற்கொலை தாக்குதலில் ஈடுபடுத்தபட்டது தொடர்பாகவும் கோபமுடன் விவாதித்தார்கள். சிங்களவர்கள் பலர் ”முஸ்லிம்கள் அச்சத்தில் இலங்கையில் கலப்பு திருமணம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.ஆனால் அரபு நாடுகளில் வைத்து செய்கிறார்கள்” என கொதிப்புடன் கூறினார்கள். மதமாற்றம் செய்யபட்ட பெண்கள் தொடர்பாக எப்போதும் பொதுச்சட்டமே பிரயோகிக்கபட வேண்டுமென்றும் சிலர் சொன்னார்கள். கலப்பு திருமணங்கள் விவாகரத்துக்கள் பொதுசட்டத்தின் கீழ்வரும் என்கிற திருத்தம் வந்தால் மூவினங்கள் மத்தியிலும் எதிர்ப்பு குறைய வாய்புள்ளது. முஸ்லிம்களுக்கு தனி மற்றும் பொது சட்டங்களிடை தெரிவு இருக்கவேண்டும் என்கிற கருத்தை சிங்கள தரப்பினர் வலியுறுத்தினார்கள். கலப்பு திருமண எதிர்ப்பு சிங்களவர் தமிழர் மலையக தமிழர் மத்தியில் பலமாகவும் பரவலாகவும் உள்ளது. பெண்ணிய அமைப்புகளின் எதிர்ப்பும் உள்ளது. இப்பிரச்சினை முக்கிய சிக்கலாக உருவாகி வருகிறதால் முஸ்லிம் பல்கலைக்கழக மற்றும் ஊடகதுறையினர் ஏனைய மூன்று இனத்தவருடனும் ஒரு ஆய்வு கலந்துரையாடல்களில் ஈடுபடுவது அவசியம் என்று தோன்றுகிறது. இல்லவிடின் இனவாதக் கூச்சல்கள்தான் மிஞ்சும்.

    ReplyDelete
  2. ITHANAIPATRI RISHAD, HAKEEM, MUJIBRAHMAN, FOUZI, EN VAITHIRAKKAVILLAI.
    PITTU THONDAIYIL IRUKIVITTATHAA????

    ReplyDelete
  3. INDA PIRERANAI KONDUVANDA
    U N P MPKAL IRUVAR.
    YAANAIYIN VAALIL THONGIKONDIRUKKU
    RISHAD HAKEEM,CHMPIKAVIN
    MADIYIL UKKAANDIRUPPAVARKAL.
    NAMMA KARADI IRANDUM U N P THAAN.

    ReplyDelete
  4. ஜெயபாலன் ஐயா அவர்களின் கருத்தை ஒரு மனிதன் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் தனிமனித உரிமைக்கு எதிரானதாகவே பார்க்கிறேன்.இஸ்லாத்தில் முஸ்லிமான இருவருக்கு நடக்கும் திருமணத்தான் செல்லுபடியாகும்.எனவே கலப்புத் திருமணம் என்பது இஸ்லாத்தில் இல்லை.விரும்பியவர் இஸ்லாத்திற்கு வந்துதான் திருமணம் முடிக்கலாம் அல்லாது அவர் மார்க்கத்தில் இருந்து கொண்டு இஸ்லாமியர் ஒருவரை திருமணம் முடித்தாலும் அது இஸ்லாமிய திருமண சட்டத்தினுள் வராது.ஆகவே கலப்பு திருமணம் என்று சொல்லி அடுத்த இனமும் தொடர்புபடுகிறது எனச் சொல்லி வேறு சமயத்தவர்கள் இஸ்லாமிய திருமண சட்டத்தில் மூக்கை நுழைப்பது பொருத்தமானதல்ல.இவ்வாறே முஸ்லிமான ஒருவர் ஏனைய சமயத்தைச் சார்ந்தவர்கள் சமயத்திற்குச் சென்று திருமணம் முடித்தால் அதனை இஸ்லாமிய திருமண சட்டத்தோடு பொருத்திப்பார்க்க வேண்டிய அவசியமோ அல்லது அவர்கள் கையாளப்படும் சட்டங்களை பரிசீலனை செய்யவேண்டுமெனக் கூற வேண்டிய தேவையோட இல்லை.அது நாகரீகமானது மட்டுமல்ல தர்க்கரீதியானதுமல்ல.

    ReplyDelete
  5. Muhammed Ariff அவர்களே. நான் என் கருத்தை சொல்லவில்லை. சிங்களவர் தமிழர் மலையகத் தமிழர் மத்தியில் பரவலாக நிலவும் கர்த்தை ஒரு ஆய்வு மதிப்பீடாகவே முன் வைத்தேன். உங்களுக்கு சுதந்திரம் உள்ளதுபோலவே மறு இன பெற்றோருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. அவர்அவர்கள் தங்கள் தங்கள் கருத்துபடி முடிவெடுக்கலாம். அல்லது எலோரும் கலந்துரையாடி முடிவுக்கு வரலாம். அவரவர் விருப்பம். நான் ஒரு ஆய்வாளன் மட்டுமே

    ReplyDelete
  6. முஸ்லீம் சட்டங்களை நீக்குவது அல்லது திருத்துவது போன்ற விடயங்களை மேற்கொள்வது
    புனித திருக்குர்ஆன் மற்றும் நபி(ஸல்)அவர்களின்
    வாழ்க்கைமுறைமை போன்றவற்றின் அடிப்படையில் நடைபெறவேண்டும்.இதற்கு இஸ்லாத்தை நன்கு கற்றறிந்தவர்கள் அதற்கான கோரிக்கைகளை ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும் அதைவிடுத்து தங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விரும்பியவர்களெல்லாம் இதில்
    மூக்கை நுழைய முற்பட்டால் விளைவு விபரீதமாகி விடும்.புனித பெளத்த மத சில சட்டங்களையும் அதன்
    சித்தாதங்களையும் இல்லாமல் செய்யவேண்டுமென அல்லது அதில் சிலதை மாற்ற வேண்டுமென வேற்று மதத்தவர் ஒருவர் கோருவது எந்த விதத்தில் நியாயமற்றதோ அவ்வாறே இஸ்லாமிய மத சட்டங்களையும் அனுஷ்டானங்களையும் மாற்ற வேண்டும் அல்லது இல்லாமல் செய்ய வேண்டுமென வேற்று மதத்தவர் கோருவது நியாயமாகப்படாது.

    ReplyDelete

Powered by Blogger.