Header Ads



கூட்டணி ஒன்றை அமைத்து, பொதுத்தேர்தலில் களமிறங்க உள்ளேன் , சஜித்

சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதனூடாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

திவுலபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை என்றார். 

´புதிய பயணத்தை ஆரம்பிக்கவே நாம் புதிய கதவை திறந்துள்ளோம். 

பொது மக்கள் அரசாங்கம், பொது மக்களின் யுகம் ஒன்றை ஆரம்பிப்போம்´. 

இதேவேளை கடந்த பொதுத் தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமொன்று கம்பஹா, மீரிகமவில் நடைபெற்றது. 

இதன்போது உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ´இப்போது வேலைநிறுத்த போராட்டங்கள் இல்லை. அந்த வேலைநிறுத்த போராட்டங்கள் ஊழியர்களின் நலனுக்காக நடத்தப்பட்டதல்ல மாறாக அவை அரசாங்கத்தை கைப்பற்ற முன்னெடுக்கப்பட்டவை. இப்போது சுகமாக உள்ளதா? 

பொறுப்புள்ள எதிர்க் கட்சி என்ற வகையில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறப்பதற்கு இடமளிக்க போவது இல்லை´

3 comments:

  1. KADANDA 5 VARUDANGALAKA, U N P MANDIRIKAL,PATHAVIKALUKKAHA,SHANDAI PIDITHAARKALEY THAVIRA,NAATTU MAKKALUKKU ENDAVITHAMAANA SHEVAIUM SHEIYAMAL IRUNDUVITTU, INNAMUM PATHAVIKKAAKA SHANDAI PODUM UNGALUKKU,
    VARUKINRA THERTHALIL, THAKKA PAADAM
    PDIPPIKKA VENDUM.

    ReplyDelete
  2. யூஎன்பீயை ஆட்சியின் தலைமைப்பீடத்துக்கு விற்று அதற்கு பகரமாக மத்தியவங்கி களவாடலுக்கு எந்த சட்ட நடவடிக்ைகயும் எடுக்கமாட்டேன் என்ற வாக்குறுதியுடன் சூனாக இருக்க ரணில் திட்டம் போட்டு முடிந்தாட்சி. இனி சஜித் தனக்கு சரியெனக்காண்பதைச் செயயலாம் அதன்விளைவும் தோல்வியும் விரக்தியும் தான் என கணக்குப் போட்டாச்சு.

    ReplyDelete
  3. பிழை திருத்தம்: சஜித் அவர்களே ஐ.தே.காவுக்கு வெளியில் புதிய கூட்டணியை அமைப்பேன் என சொல்ல தவறிவிட்டீங்க. இது எப்பவோ முடிந்த காரியம்.

    ReplyDelete

Powered by Blogger.