January 31, 2020

சவூதியில் வைத்து நானும், அஷ்ரப்பும் முஸ்லிம்களின் இருப்புப்பற்றி தீவிரமாக ஆராய்ந்துள்ளோம்

சிங்கள மக்களின் நகரம் கண்டி என்பது போல, தமிழர்களின் நகரம் யாழ் போல கிறிஸ்தவர்களின் நகரம் நீர்கொழும்பு என்பது போல முஸ்லிம்களின் நகரம் கல்முனையே என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார்.

கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாயில் முன்றலில் நேற்று (31) மாலை முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் வெஸ்டர் ஏ.எம். ரியாஸ் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், 

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு 1994 இருந்து ஆரம்பமானதாகும். நானும் அவரும் சவூதியில் வைத்து இந்த நாட்டின் முஸ்லிங்களின் இருப்புப்பற்றி தீவிரமாக ஆராய்ந்துள்ளோம். அவரும் நானும் சட்டக்கல்லூரியில் மாணவ தலைவர்களாக இருந்த வரலாற்றை நினைவு கூறுகிறேன்.

இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கென தீவிரவாத இயக்கம் எதுவும் இருக்கவில்லை. முஸ்லிங்கள் தீவிரவாத கொள்கைகளை எப்போதுமே ஆதரித்ததுமில்லை. ஆனால் ஒருவர் செய்த வேலையால் சகல முஸ்லிங்களுக்கும் தலைகுனிவாக அமைந்தது. அந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அப்பாவிகளை சட்டத்தரணியாக இருந்த நாங்கள் போராடி விடுதலை செய்துள்ளோம்.

கிழக்கில் முஸ்லிம்கள் 40% வீதம் மட்டுமே வாழ்கிறார்கள் ஆனால் கிழக்கிற்கு வெளியே 60 % வீதம் முஸ்லிங்கள் வாழ்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த நாட்டில் வாழும் நாங்கள்
பெரும்பான்மை சமூகத்துடன் சேர்ந்து இணைந்தே வாழ வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் சிறந்த ஒரு ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். இந்த ஜனாதிபதி சொல்வதை செய்யக் கூடிய தைரியமான ஆளுமை மிக்கவர். இந்த நாட்டை தலைசிறந்த நாடாக மாற்றும் திறமை கொண்டவர். தேர்தல் காலங்களில் மக்களிடம் பொய்யான பிரச்சாரங்களை செய்தவர்கள் கண்ணாடி முன்னர் நின்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

எமது நாடு முன்னேற வேண்டும் என்றால் பாதுகாப்பு அவசியம் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ பாதுகாப்பு அவசியம் அந்த பாதுகாப்பை உறுதி செய்யக் கூடியவர் எமது ஜனாதிபதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஜாதி பேதங்களை மறந்து நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

- நூருல் ஹுதா உமர் -

8 கருத்துரைகள்:

Did he really ? Late Asraf will be attached to pohottu with A.S now? If he praise Asraf let him join M.C and take leadership to work for Muslims.

Can he give samw speech in colmbo saying Kalmunai is Muslim's City?

Dear Muslims do not blindly be emotiomal of politicians speeches...do not blimdly support pohottu, unp, slfp or any other.Rather list out our problems, fears and needs and keep infront of them all... see who technically agree to offer it us ( not by speech but by action mechanism) then cast your vote.

Do not be emotional who try to hide the Digana, Kandy, Ampara, Aluthgama racists terrorists who harmed Muslims and their leaders who were behind the plan. Just only talking the stupidty of sahran who killed innocent public due to the lack of guidance to him.

THOSE DO NOT RESPECT Islam and the hijaab dresscode saying Sari is enough for Muslim women... says they are worrying of Muslims. They simply come eatern trying to devide Muslim votes to decrease the Muslim MPs to parliment....

It is not UNP Pohottu or SLFP... Rather plan to increase Muslim MP to parliment to talk our problems need and solve the fear of people and the equal all rights to live as citizens of this our land.

May Allah guide us to Islamic way of life and not to call people out of islamic way of life.

Insha Allah Muslims must send this guy to parliament.

Lets learn to get good out of each and leave the bad to themselves. Likewise if any good is comming through Ali Sabry & GR, we need to accept them and move forward. IA everything is eventually from Allah SWT

கல்முனை யும் தமிழர் நகரம் தான்.

90களில் இயங்கிய ஜிகாத், தற்போதுள்ள இலங்கை ISIS போன்றன இலங்கை முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளே.

சட்டத்தரணி அலி சப்ரி சொல்வதற்கு ஆம்,ஆம்,ஆம் என்று ஆமாசாமி போடுவதைத் தவிர இந்த மோட்டு சமூகத்தின் மத்தியில் எந்த பதிலீடான கொள்கையோ,சமூக இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு நிலையான திட்டமோ கிடையாது. அது கல்முனையும் சரி, கொழும்பும் சரி, அம்பாந்தோட்டையும் சரி எல்லாம் ஒன்றுதான். எனவே, அடித்துச் செல்லும் வௌ்ளத்தின் ஒரு சிறிய பகுதியாக இந்த சோனக சமூகமும் வௌ்ளத்தில் கலக்க வேண்டியதுதான்.

முஸ்லிம்களின் நகரம் கல்முனை எனும் உங்கள் கருத்தை வரவேற்று பாராட்டுகிறேன்.

We request you to contest the upcoming general election from Kurunegala district and we will definitely support you.

கல்முனை முஸ்லிம்களின் இதயம் அதை தமிழ் பயங்கரவாதம் ஆக்கிரமித்தால் ஈழம் பெற இலகுவாகிவிடும். இன்று கிழக்கில் மட்டக்களப்பு திருகோணமலை நகரங்கள் தமிழ் பிரிவினைவாதிகளிடம் இருப்பதால் அம்பாறை மாவட்டத்தில் கல்முனையையும் திருடிக்கொண்டாள் கிழக்கின் மூன்று தலை நகரங்களும் தமிழ் பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்று ஈழம் பெற இலகுவாகிவிடும்

Post a comment