January 08, 2020

இலங்கையில் தங்கத்தின், விலை கிடுகிடு என உயர்வு

24 கரட் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளதாக தெரியவருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையிலேயே இலங்கையில் ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலையானது 81,640.76 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையின் தங்க வரலாற்றில் 24 கரட் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளமை இதுவே முதல் முறையாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment