Header Ads



ஜெரூசலேம் விற்பனைக்கில்லை,, டிரம்பின் திட்டத்தை நிராகரித்தது பாலஸ்தீனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள இஸ்ரேலிற்கு சாதகமான மத்திய கிழக்கு சமாதான முயற்சியை பாலஸ்தீன அதிகாரிகள் உடனடியாக நிராகரித்துள்ளனர்.

டொனால்ட் டிரம்பின் சமாதான திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலஸ்தீன ஜனாதிபதி முகமட் அப்பாஸ் ஜெரூசலேம் விற்பனைக்கில்லை என  கருத்துவெளியிட்டுள்ளார்.

எங்கள் அனைத்து உரிமைகளும் விற்பனைக்குரியவையில்லை, அந்த உரிமைகள் குறித்து  பேரம்பேச முடியாது எனவும் பாலஸ்தீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் யோசனையை பாலஸ்தீன, அராபிய கிறிஸ்தவ முஸ்லீம்  குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆயிரம் தடவை சொல்கின்றோம், இல்லை, இல்லை  என குறிப்பிட்டுள்ள பாலஸ்தீன ஜனாதிபதி ஆரம்பத்திலிருந்தே இந்த யோசனையை நாங்கள் எதிர்த்துவந்துள்ளோம் எங்கள் நிலைப்பாடு சரியானது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலின் அனைத்து முக்கிய கோரிக்கைகளையும் உள்ளடக்கும் விதத்திலான திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார்.

இந்த திட்டம் இஸ்ரேல் மேற்கு கரையில் உள்ள அனைத்து குடியேற்றங்களையும் கையகப்படுத்துவதற்கு வழிவகுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

மேலும் மட்டுப்படுத்தப்பட்ட இறைமையுடன் பாலஸ்தீன தேசமொன்றை உருவாக்குவது குறித்தும் டிரம்பின் திட்டம் தெரிவித்துள்ளது.

ஜெரூசலேம் இஸ்ரேலின் பிரிக்க முடியாத தலைநகரமாக விளங்கும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் எதிர்கால பாலஸ்தீன தேசத்தின் தலைநகராக கிழக்குஜெரூசலேம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

யூத குடியேற்றங்கள் காணப்படும் பகுதிகள் உட்பட மேற்கு கரையின் பல பகுதிகள் மீதான இறைமையை அமெரிக்கா அங்கீகரிக்கும் என டிரம்பின்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பாலஸ்தீன நிலப்பரப்பை இரட்டிப்பானதாக்கி கிழக்கு ஜெரூசலேத்தில் பாலஸ்தீன தலைநகரம் அமையும் இங்கு அமெரிக்கா தனது தூதரகத்தை திறக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Saudi, UAE, and other Arab countries would support this peace proposal as they have to say yes to their master America.

    ReplyDelete
  2. இது இஸ்ரேலின் எதிர்காலத்திட்டத்தினையும் அபிலாசைகளையும் உள்ளடக்கிய மூன்று தீவிர பழமைவாத யூதர்களினால், டிரம்ப் பின் யூத மருமகனினாலும் முஸ்லீம் இரத்தவெறிபிடித்த நெதன்யாகு மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் டேவிட் பிரெட்மனாலும் உருவாக்கப்பட்டு டிரம்ப்பினால் வெளியிடப்பட்ட்ட திட்டமாகும், எல்லோரும் எதிர்பார்த்ததைப்போல் அமெரிக்கபடைகள் நிலைகொண்டுள்ள சவூதி, ஐக்கிய அரபு ராச்ஜ்யம், மற்றும் அமெரிக்க உதவிப்பணத்தில் உயிர்வாழும் எகிப்து போன்ற நாடுகளும் இதனை ஆதரிக்க பலஸ்தீனர்களைத் தூண்டிவருகின்றன, சொந்தக்காலில் நிட்ற்கும் துருக்கி, ஈரான் போன்ற சில நாடுகள் இதனை வன்மையாக எதிர்த்துள்ளன, ஏனைய அமெரிக்க மற்றும் சவூதி உதவித்தொகையை நம்பிவாழும் பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் வாய்மூடி மௌனியாக இருப்பதில் அதிசயமில்லை - முஸ்லீம் நாடுகள் ஒற்றுமையாக மற்றும் முஸ்லீம்நாடுகளாக இல்லாதவரை இச்சமூகம் கேவலப்பட்டு அமெரிக்க - இஸ்ரேலிய கால்களில் மன்றியிடுவதனை யாராலும் தடுக்கமுடியாது

    ReplyDelete

Powered by Blogger.