Header Ads



பிரதிப் பொலிஸ்மா அதிபர் லத்தீப் மீது, மாகல்கந்தே சுதத்த தேரர் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவை அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர் லத்தீப் கலைத்து விட்டதாக நவ சிங்க ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று -12- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

சஹ்ரானின் தாக்குதல் நடக்கவிருந்த சமயத்தில் லத்தீப் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவை கலைத்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு 8 மாதங்களுக்கு முன்னர் சஹ்ரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பற்றி தேடி வந்த களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவை கலைக்கப்பட்டுள்ளது.

இதனால், களுவாஞ்சிக்குடி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள விசேட அதிரடிப்படை முகாம்களில் புலனாய்வுப் பிரிவுகள் இல்லை. அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் கொழும்பு மருதானைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

2 comments:

  1. Adaiiii.neengalol pansalayla
    Irundaa poodhim.ungalukku eethu arasial.araslyale oru saakada neeyuma????

    ReplyDelete
  2. ஆட்டைக் கடிச்சி மாட்டைக் கடிச்சி பொறவு நாயைக்கடிச்ச kathai yaa அல்லோ இருக்கு. புதிய வேதாளம் கொப்பு இல்லாத முருங்கை மரத்தில் ஏறிட்டதோ.

    ReplyDelete

Powered by Blogger.