January 13, 2020

முஸ்லிம்களை இலக்குவைக்கும், தனிநபர் சட்டமூலங்கள்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் சட்­ட­மூ­ல­மொன்றை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருக்­கிறார். 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மா­கவே இது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் 1907 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விவாக (பொது) கட்­டளைச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்­றையும் அவர் தனி­நபர் சட்­ட­மூ­ல­மாக நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருக்­கிறார். இதற்­க­மைய குறித்த கட்­டளைச் சட்­டத்தில் மாற்றம் மேற்­கொள்­ளப்­பட்டு முக­வு­ரையில் காணப்­படும் ‘முஸ்­லிம்­களின் திரு­மணம் தவிர்ந்த‘ என்ற வசனம் நீக்­கப்­பட வேண்டும் என ரதன தேரரின் பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில் அர­சி­ய­ல­மைப்பில் 21 ஆம் 22 ஆம் திருத்­தங்­களை முன்­வைத்து இரு வேறு தனி நபர் பிரே­ர­ணை­களை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜ­பக்ச கடந்த வாரம் வெளியிட்­டி­ருந்தார். இதில் ஒன்று பாரா­ளு­மன்ற தேர்தலில் சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்­கு­ரிய வெட்டுப் புள்­ளியை 5 வீதத்­தி­லி­ருந்து 12.5 வீத­மாக மீண்டும் அதி­க­ரிப்­ப­தற்­கான தனி நபர் பிரே­ரணை முக்­கி­ய­மா­ன­தாகும்.

மேற்­படி இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளதும் தனி­நபர் பிரே­ர­ணை­க­ளி­னதும் நோக்­க­மா­னது சிறு­பான்மை சமூ­கங்­களை குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தை இலக்­காகக் கொண்­டவை என்­பது வெள்ளிடை­ம­லை­யாகும்.

அது­ர­லியே ரதன தேரர் மிகப் பகி­ரங்­க­மா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதப் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து வரு­ப­வ­ராவார். ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்­னரும் ஜனா­தி­பதித் தேர்தல் காலத்­திலும் அவர் முன்­னெ­டுத்த பிர­சா­ரங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் இல­குவில் மறந்­து­விட முடி­யாது. இந் நிலை­யில்தான் இன்று சட்­டங்கள் மூல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான காய்­ந­கர்த்­தலை அவர் ஆரம்­பித்­துள்ளார்.

அதே­போன்­றுதான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜ­பக்­சவின் செயற்­பா­டு­களும் இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. சிறு­பான்மை கட்­சி­களும் சிறிய கட்­சி­களும் தற்­போ­தைய வெட்டுப் புள்ளி முறை­மைக்கு அமை­வா­கவே ஓர­ள­வேனும் தமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடி­கி­றது. இது இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தின் பன்­மைத்­து­வத்­திற்கு மிகவும் அவ­சி­ய­மா­ன­தொரு அம்­ச­மாகும். ஆனால் இவ­ரது பிரே­ர­ணைக்­க­மைய வெட்டுப் புள்ளி மீண்டும் 12.5 ஆக அதி­க­ரிக்­கப்­ப­டு­மாயின் அது சிறு­பான்மை சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் பெரும்­பான்மை சமூ­கத்­தி­லுள்ள மாற்று சக்­தி­களின் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் வெகு­வாக குறைத்­து­விடும் அபா­யத்தை தோற்­று­விக்கும்.

மேற்­படி இரு எம்.பி.க்களிதும் பிரே­ர­ணை­க­ளி­னதும் வெற்றி தோல்விகள் ஒரு­பு­ற­மி­ருக்க, இவர்­க­ளது இன­வாத நகர்­வுகள் கவலை தரு­வ­தா­க­வே­யுள்­ளன.

இந்தப் பிரே­ர­ணைகள் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் ஆசீர்­வா­தத்­து­டன்தான் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­னவா? இவற்­றுக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­னரா? என்­பது இது­வரை தெரி­ய­வில்லை. தற்­போ­தைய பாரா­ளு­மன்ற காலத்தில் இல்­லா­வி­டினும் அடுத்த பாரா­ளு­மன்ற பதவிக் காலத்தில் இவ்­வா­றான மேலும் பல சட்­ட திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்கள் சிறு­பான்மை சமூ­கத்­திற்­கெ­தி­ராக கொண்­டு­வ­ரப்­ப­டலாம் என்ற அச்சம் இப்­போதே எழத் தொடங்­கி­யுள்­ளது. இதற்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இட­ம­ளிக்கக் கூடாது என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

‘‘நான் சகல மக்களையும் அரவணைத்துச் செல்லுகின்ற ஜனாதிபதி‘‘ என தனது பதவியேற்பு நிகழ்விலும் பாராளுமன்ற அக்கிரசான உரையிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அளித்த வாக்குறுதியை அவர் இலகுவாக மறந்துவிட முடியாது. அந்த வகையில் இவ்வாறான இனவாத நகர்வுகள் தொடர்பில் அவர் விழிப்புடன் இருப்பதும் சிறுபான்மை சமூகத்திற்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-

vidivelli

2 கருத்துரைகள்:

All western countries, India, China all removed it a long ago. Muslims wanted to go live there.
Why you want it in only in SL

Mr. Ajan

Mind your business, this is the problem of Muslims. you will feel the heat when they try to remove the Thesawalamai Law of Tamils (Jaffna) marriage.

Post a Comment