Header Ads



புத்தளம் நகர சபைக்கு புதிய, முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் - அப்புஹாமி


- இர்சாத் றஹ்மத்துல்லா -

புத்தளம் நகர சபைக்கு வெகு விரைவில், புதிய முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக புத்தளம் மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினரும்,தொகுதி அமைப்பாளருமான ` ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

புத்தளம் நகர சபை உறுப்பினர் ஜமீனா கமறுதீனின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் பிரதமர்  ரணில் விக்ரமசிங்கவின் நிதியில் புனமைப்பு செய்யப்பட்ட பாதையினை திறந்து வைக்கும்  நிகழ்வு இன்று  ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்  அவர் தமதுரையில் –

புத்தளம் மக்கள் இம்முறை  ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று பதிவினை டீற்படுத்தினர்.பொதஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஸவினையும் விட 56 ஆயிரம் வாக்குகளை சஜித் பிரேமாதாசவுக்கு அதிகமாக அளித்தனர்.இந்த நிலையில் இதனை தாங்கிக் கொள்ளமுடியாத பொஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் ஜக்கிய தேசிய கட்சியினை புத்தளம் தொகுதியில் வீழ்த்துவதற்கு பணத்தினை  செலவு செய்ய ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.இதற்கு புத்தளம் மக்கள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள்.

இந்த நாட்டு முஸ்லிமகளின் மத காலாசாரி விழுமியங்களை நான் நன்கறிவேன்.இவர்களது மத சுதந்திரம் ஒரு போது அடக்கப்படக் கூடாது,முஸ்லிம் பெண்களின் விவகாரங்கள் தொடர்பில் பேசுவதற்கு முஸ்லிம் அரசியல் பெண்களின் தலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.இதற்காக வேண்டி புத்தளம் நகர சபையில் முஸ்லிம் பெண் உறுப்பினராக ஜமீனா கமர்தீனை நாம் தெரிவு செய்தோம்.

நான் சிங்களவனாக இருந்தாலும் சிங்கள இனவாதி இல்லை.சகல சமூகமும் சமமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவன்.ஒரு போதும் இனவாதிகளுக்கும்,அடிப்படைவாதிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குபவனுமல்ல என்பதை முஸ்லிம்கள் நன்கறிவார்கள்.இதனால் தான் என்மீது சிலர் காழ்புணர்ச்சி கொண்டு என்னை விமர்சிக்கின்றனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடை பெறும் பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாசவினை பிரதமராக கொண்ட அரசாங்கம் அமைக்கப்படும்.2025 இல் அவர் ஜனாதிபதியாக வருவார்.ந் நிலையில்  தொடரந்தும் புத்தளம் தொகுதி மக்கள் எம்முடன் இணைந்து பயணிக்க அழைப்புவிடுக்கின்றேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் `ஹெக்டர் அப்புஹாமி கூறினார்.

இந்த நிகழ்வில் புத்தளம் நகர சபை உறுப்பினர் விஜித,சித்தி சலீமா,முன்னாள் நகர சபை உறுப்பினர் எம்.அன்சார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.