Header Ads



காவி தீவிரவாதியை நேர் எதிராக, சந்தித்த திப்புவின் வாரிசு



துப்பாக்கி வைத்திருந்த காவி தீவிரவாதி சுட பயபடுகிறான்
 நிமிர்ந்து எதிர் கொண்ட சகோதரர் #ஷதாப்

இப்ப சொல் யார் பயந்தாக்கோலி என்று.. #சங்கி

Mard Mujahid.

ஆயுதமேந்தி வந்த RSS தீவிரவாதியான சங்கி கோபாலை நேருக்கு நேர் எதிர்கொண்ட திப்புவின் வாரிசான சகோ. கூறிய வார்த்தை

" அதிகாரத்தை வைத்துக் கொண்டு கையில் ஆயுதம் எடுப்பவனெல்லாம் வீரனாகிவிட முடியாது ".

2

நேற்றைய கதாநாயகர் ஷாதாப் ஃபாரூக் வீட்டுக்குத் திரும்பி விட்டார்..

ஜாமியா மாணவி தில்லி போலீசை நோக்கி ஒற்றை விரலை நீட்டிய காட்சியைப் போன்று,

துப்பாக்கியுடன் மிரட்டிய ராம் பக்த் கோபாலை நோக்கி ஷாதாப் ஃபாரூக் சற்றும் பதற்றப்படாமல், பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தியவாறு நிதானமாக, உறுதியாக முன்னேறிச் சென்று மிகப் பெரும் நெருக்கடியைத் தவிர்த்த காட்சியும் நீண்டகாலத்துக்குப் பேசப்படும்.
ஒன்றைக் கவனித்தீர்களா?

துப்பாக்கியை வைத்துக் கொண்டிருந்த கோபாலின் முகத்திலும் உடல் மொழியிலும் பயமும் பதற்றமும் போட்டி போட்டன...

ஆனால் கொலை மிரட்டல் விடுத்த வெறியனை நோக்கி முன்னேறிச் சென்ற போதும் சரி, அடிபட்டு வலியும் வேதனையும் வாட்டிய போதும் சரி, மருத்துவமனைக்குப் போவதற்கு வழி விடாமல் போலீஸ் முரண்டு பிடித்த போதும் சரி, சொட்டுகிற இரத்தத் துளிகளின் அளவும் வேகமும் கூடிக் கொண்டே போன போதும் சரி, தடுப்புகளின் மீது ஏறித் தான் போயாக வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு ஆளான போதும் சரி - எந்தவொரு கட்டத்திலும் ஷாதாப் ஃபாரூக் ஒரே ஒரு முறை கூட நிலை குலையவில்லை.

ஏன் தெரியுமா? எல்லாமே இறைவன் கைகளில்..! நன்மையும் அவன் மூலம்தான். தீமையும் அவன் விதிப்பது தான் என்கிற நம்பிக்கை தான்.

அந்த நம்பிக்கை வேரூன்றும் போது ஒருவன் எத்துணை பெரும் சாதனை செய்தாலும் சற்றும் பெருமைக்கோ, ஆணவத்துக்கோ ஆளாக மாட்டான். இறைவனுக்கு நன்றி செலுத்துவான்.

அதே போல ஒருவர் எத்துணை பெரும் துன்பத்துக்கு ஆளானாலும் துவண்டுவிடவோ விரக்திக்கு ஆளாகிவிடவோ மாட்டார். எல்லாம் இறைவனின் நாட்டம் என்று இறைவன் மீது அனைத்தையும் சாற்றி விட்டு இறைவனுக்காக பொறுத்துக் கொள்வார்.

இதனைத் தான் முஸ்லிம்கள் "ஈமான்" என்கிறார்கள். நம் எல்லோருக்கும் அத்தகைய நம்பிக்கையும் முதிர்ச்சியும் கிடைத்திட இறைவன் அருள் செய்வானாக...!
ஆமீன்.

Azeez luthfullah பதிவு





No comments

Powered by Blogger.