Header Ads



மதத்தை, இனத்தை வைத்து கட்சி தேவையில்லை - வளர இடமளித்தால், அடிப்படைவாதத்தையே உருவாக்கும்

மதத்தை, இனத்தை வைத்து கட்சி தேவையில்லை, அது அடிப்படைவாதம்- விஜேதாச ராஜபக்ஸ
நாட்டைப் பற்றியும், நாட்டின் எதிர்காலம் பற்றியும் பற்றுள்ளவர்கள் என்னுடைய போராட்டத்தில் இணைந்துகொள்ள முடியும் எனவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் ஆரம்பித்தது முதல் எனது போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது முதல் அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றும் 21 ஆவது திருத்தச் சட்டம் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய சகோதர வார இதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நீண்ட செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனது கடமையைப் போன்றே எனது பொறுப்பை நான் நிறைவேற்றுவேன். நாட்டைப் பற்றியும், எமது எதிர்காலம் பற்றியும் அக்கறையுள்ளவர்கள் என்னுடன் இணைந்துகொள்ளலாம். இதற்கு கிடைக்கும் தீர்வின் மூலம் ஜனநாயகத்தையும், சிறந்த நிருவாகத்தையும் கட்டியெழுப்பலாம்.

நாட்டில் பெரும் கட்சி, சிறு கட்சி என வகைப்படுத்த முடியாது. எல்லாம் ஒரே மாதிரியான கட்சி. இந்தக் கட்சிகள் கொள்கையொன்றை அடிப்படையாக வைத்து உருவாக வேண்டும். மதம் ஒன்றையும், இனம் ஒன்றையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகுமாக இருந்தால், அங்கு பிரிவினை உருவாகும். இந்தக் கட்சிகளுக்கு வளர இடமளித்தால், அது அடிப்படைவாதத்தையே உருவாக்கும். இது எமது நாட்டை அழிக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  DC

1 comment:

  1. விஜயதாசவின் கருத்து உண்மைதான் ஆயினும் இப்படியான திட்டம் ஒன்று நிறைவேறும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் இனங்களுக்கு பொருத்தமான விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைக்காது போகலாம். இதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினராக வரக்கூடியவரகளின் அட்'டகாசம் மிதமிஞ்ஞிப் போய்விடும். இதற்கு ஒரே பரிகாரம் விகிதாசார அடிப்படையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பங்கிடப்பட வேண்டியதுதான். உதாரணமக சிங்களவரகள் 80 தமிழர்கள் 12 முஸ்லிம்கள் 8. இது மத அடிப்படையில். இனரீதியிலும் அண்ணளவாக இதுவே வரும். எனவே இதற்கு முயற்சித்தால் சிறப்புடையதாக இருக்கும்.

    Vijayadasa's view is true, however, that if such a plan is to be achieved, there will be no representation on the basis of ethnic proportions in Parliament. This will leave the majority of those who can be in parliament a little longer. The only remedy for this is the sharing of parliamentary representation on a proportional basis. For example, Sinhalese, 80% Tamils 12%, ​​and Muslims 8%. The same goes for ethnicity proportionately. So it is worth trying.

    ReplyDelete

Powered by Blogger.