Header Ads



பிள்ளையான் ஏன், அசாத் மௌலானாவை பயன்படுத்தினார்..?

சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு சிங்களம் தெரிந்த நிறைய தமிழர்களை அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அசாத் மௌலானாவை ஏன் வைத்திருந்தார் என்பது தெரியவில்லை என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நா. விஷ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகள் தலைஉயர வேண்டும் என்று குறியாக இருக்கலாம்.

இருந்தபோதிலும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது, கடந்த நாட்களில் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை முதலமைச்சராக கொண்டு இயங்கிய காலத்தில், அவர் தனக்கென மொழிப்பெயர்ப்பு செய்வதற்காக அசாத் மௌலானாவை வைத்திருந்தார் என்பது ஒரு கருத்தாக இருந்தது.

அசாத் மௌலானா என்பவர் தமிழர் அல்ல ஒரு முஸ்லிம். இவர்களுக்கு ஒரு மொழிப்பெயர்ப்பு தேவையாக இருந்தால், இந்த கட்சி சிங்களம் தெரிந்த நிறைய தமிழர்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏன் அசாத் மௌலானாவை பயன்படுத்தினார் என்பது என்று தெரியவில்லை?

ஆனால், இந்த மாவட்ட அரசாங்க அதிபராக காலாமதி பத்மநாதனை நியமித்ததில் எந்தவொரு பிழையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Truth be told, Tamils do not have faith in Tamils,
    A race of no confidence.?

    ReplyDelete
  2. மட்டக்களப்பு தமிழர்களுக்கும் யாழ் தமிழர்களுக்கும் அடிப்படையிலேயே வேறுபட்ட கருத்துகள் முஸ்லிம்களைப்பற்றி இருக்கின்றது. யாழ்ப்பாண மக்களும் அவரகளின் தலைவர்களும் என்றும் முஸ்லிம்களுடன் ஒத்துப்போகக்கூடியவர்கள். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலவர காலத்தில் அவரகள் முஸ்லிம்களுக்கு செய்த மறைமுக உதவிகள் இதற்கு சான்றாகும் ஆனால் மட்டக்களப்பு தமிழர்கள் அதன் தலைவரகளால் பிழையாக வழிகாட்டப்பட்டதனால் (கருணா அம்மான்) அவரகளது இயல்புகள் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. வட மாகாண மற்றும் திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களின் வாழ்க்கை முறையினை அறிந்து அவரகள் தம் பிற இன மக்களுடன் எவ்வாறு வாழ்கின்றனர் என்பதைப்பின்பற்றி மட்டக்களப்பு தழிழ் மக்கள் வாழ்கின்றபோது அரசியல் கலாசாரரீதியாக பல மாற்றங்களை அடையமுடியும். பிள்ளையான் அவரகள் மௌலானாவை தமது உதவிக்கு வைத்திருந்தார் என்றால் மௌலானாமீது ஐயா அவரகள் கொண்ட பெரு நம்பிக்கைதான் காரணம். பிரிந்து வாழ்வதனைவிட சேர்ந்து வாழ்வதில்தான் பெருமையும் ஒற்றுமையும். இதனை மர மண்டைகள் உணர்ந்தாலே போதுமானது.

    ReplyDelete

Powered by Blogger.