Header Ads



ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு, முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்

சகல மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சுபீட்சமான நாட்டை கட்டிஎழுப்பும் ஜனாதிபதியின் எண்ணக் கருவுக்கு முஸ்லிம் சமூகமும் ஒத்துழைக்க வேண்டுமென, ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.தெவிநுவர கல்வி வலயத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின்அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இப்பாடசாலைகளின் அதிபர்கள் பங்கு பற்றிய கூட்டம் கூட்டம் கண்டி கெலிஓயவிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் இல்லத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் உரையாற்றிய அவர்: ஜனாதிபதி எதிர்பார்க்கும் கௌரவமானதும் சுவிட்சமிக்கதுமான தேசத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளுக்கு முஸ்லிம் சமூகம் ஒத்துழைக்க வேண்டும். அரசியல் ரீதியாக தேசிய கட்சியில் இணைந்து கொண்டு பயணம் செய்ய வேண்டியது காலத்தின் காட்டாயத் தேவையாகும்.பெரும்பான்மையின சமூகத்துடன் இணைந்து சொல்லாமல் தனிப்பட்டுச் செல்வது இக்கால கட்டத்தில் பொருத்தமற்றதாகும். அவர்களுடன் சேர்ந்து எமது ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்தி சலுகைகள், அபிலாசைஷகளைப் பெற்றுக் கொள்ளல் அவசியம்.  

உடுநுவரத் தேர்தல் தொகுதியில் 12 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. அதில் ஒரு பாடசாலை தேசிய பாடசாலையாகும். யட்டிநுவர தேர்தல் தொகுதியில் 7 பாடசாலைகள் உள்ளன. உடுநுவர தேர்தல் தொகுதியில் 5 பாடசாலைகள் உள்ளன. தெவிநுவர கல்வி வலயத்தில் இரு தொகுதிகளையும் சேர்த்து சுமார் 8000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பிள்ளைகளின் குடும்பங்கள் கிட்டத்தட்ட 6000 பேர் வரை இங்கு வசிக்கின்றனர். 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இங்கு கற்பித்தலில் ஈடுபடுகின்றனர். இவர்களை சிறந்த முறையில் கட்டி எழுப்புவதற்கு கல்வி அத்தியாவசியமாகும்.

இவர்களுக்கு    சரியான வழிகாட்டல்களை வழங்க வேண்டும். சரியான வழிகாட்டல் இன்மையாலேயே இளம் தலைமுறையினர், நெறிபிறழ்கின்றனர். முஸ்லிம் சமூகத்திற்கு மிக அவசியமானது கல்வியே. இந்த இலக்கை வென்றெடுப்பதற்கு சிறப்பான கல்வி வழிகாட்டல் அவசியம். கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளேன். கண்டி மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியுள்ளார். எனவே இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பனதாக அமையும் என்றார்.  

எம்.ஏ.அமீனுல்லா, 

1 comment:

  1. ஜனாதிபதிக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவளிக்க முன்பு முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைத் தேவை அதன் இலக்கு என்ன என்பதை நன்கு ஆய்வு செய்து, பல்லின சமூகங்களின் மத்தியில் அதனைச் சரியாக வரையறை செய்து அது பற்றி சமூகத்துக்கு பல மட்டங்களிலும் அறிமுகம் செய்து அதன் கோரிக்ைககளையும் பெற்று அவற்றை ஆய்வு செய்து மிகவும் பொருத்தமானவற்றைத் தெரிவு செய்து சமூகத்தின் பொது கலந்தாலோசனைக்குச் சமர்ப்பித்து அதன் அங்கீகாரம் பெற்று சனாதிபதிக்கு சமர்ப்பித்து அதனை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பதை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்கினால் இந்த சமூகம் இலங்கைத் தாய்நாட்டில் தனது இருப்பைத் தக்கவைத்துக்க கொள்ளலாம். அ்து தவிர அங்கும் இங்கும் மக்களைக்கூட்டி, தனது சொந்த தேவைகளை அரசாங்கம் மூலம் நிறைவு செய்து கொள்ள பொதுமக்களைப் பலிக்கடாவாக்கும் சுயநல போக்குக்கு வரம்பு கட்டாவிட்டால் எதிர்காலத்தில் இந்த சமூகத்துக்கு இருப்பு இல்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நன்றாக விளங்கிச் செயல்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.