Header Ads



இம்ரான்கானின் வாழ்த்து, ஜனாதிபதி கோத்தாபயவுக்கு தெரிவிக்கப்பட்டது - புதிய தூதுவரும் நியமனம் பெற்றார்


இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது சாத் கட்டாக், 2020 ஜனவரி 20 ஆம் திகதி அன்று இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து தனது நியமனம் தொடர்பான சான்றுகளை கையளித்தார்.

இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது உயர் ஸ்தானிகர், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துக்களை இலங்கை ஜனாதிபதி மற்றும் மக்களுக்கு தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி உயர் ஸ்தானிகரை அன்புடன் வரவேற்றதோடு வெற்றிகரமான அவரது பதவிக்காலத்திற்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது சாத் கட்டாக், பாகிஸ்தான் நாட்டிலும் அதற்கு வெளியேயும் பல்வேறு பணிகளில் 35 வருடகால அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அவர், பிரான்ஸ் இராணுவ ஜூனியர் ஊழியர் பாடநெறி, பிரிட்டனின் பாதுகாப்பு புலனாய்வு இயக்குனர்கள் பாடநெறி, குவெட்டா கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி மற்றும் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பட்டதாரியும் ஆவார்.

அரசியல் விஞ்ஞானம் , போர் ஆய்வுகள் ஆகிய துறைகளில் முதுமாணி பட்டம் பெற்ற அவர் சர்வதேச உறவுகள் துறையில் எம்.பில் பட்டமமும் பெற்றவராவார்.

மேலும், பலுசிஸ்தான் , கைபர் பக்துன்க்வா, ஃபாட்டா (FATA) ,இஸ்லாமாபாத் / ராவல்பிண்டி ஆகிய இடங்களில் உயரிய பதவிகளில் பணியாற்றியது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரைப் பற்றிய தனித்துவமான பார்வையை அவருக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.